பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

உயர்நிலைப்பள்ளி நூலகம்


ஒன்று உண்டு. அது பாட நூலகும். எனவே நூலகத்தலைவர் பொதுவாகப் படிக்கும் நூல்களோடு வெவ்வேறு சுவை வழங்கும் நூல்களையும் வாங்கி வைத்தல் வேண்டும்.

ஒரு வகுப்பிலே ஆடவரும் பெண்டிரும் சேர்ந்து படிக்கிருர்கள். ஆடவர் சுவை வேறு; பெண்டிர் சுவை வேறு; ஒரே பாடத்திலேகூட ஆடவர் ஒரு பகுதியை விரும்பிப் படிப்பர்; பெண்டிர் வேருெரு பகுதியை விரும்பிப் படிப்பர். எடுத்துக் காட்டாகத் தமிழ்ப் பாடத்தைப் பார்ப்போம். ஆடவர்கள் தமிழிலக்கியப் பகுதியை விரும்பிப் படிப்பின், பெண்டிர் இலக்கணப் பகுதியை விரும்பிப் படிக்கலாம். அதனால் நூலகத் தலைவர் இலக்கிய நூல்களை மட்டும் வாங்கி வைத்தல் கூடாது; இலக்கண நூல்களையும் வாங்கி வைக்க வேண்டும். இவ்வாறு மாணவர்தம் சுவைக்கேற்ற வெவ்வேறு நூல்களை வாங்கி வைக்க வேண்டுமானல் நூலகத்தலவர் தனிப்பட்ட மாணவரோடு நெருங்கிப் பழகியிருக்கவேண்டும். ஆணுயினும் சரி, பெண்ணுயினும் சரி; எந்த மாணவராவது, நூலகத்தலைவர் வேண்தேல் வேண்டாமையுடையவர்; அதனுல்தான் தமது சுவைக்கேற்ற நூல்களே வாங்காமல் புறக்கணிக்கிருர் என்று அறிந்துவிட்டால் அதுவே கல்விக்குச் சாபக்கேடாக முடியும்; அறிவு வளர்ச்சிக்கு இடையூருகவும் தோன்றும்; ஏனெனில் அதல்ை மாணவர்தம் தனிப்பட வளரும் அறிவு ஒடுங்கிப்போவதுடன், அவர்கள் நூலகத்துக்கு அதிகமாக வருவதும் தடைப்பட்டுவிடும்.

அதனால் நூலகத் தலைவர் தனிப்பட்ட மாணவர்களின் மனப்பாங்கு, அறிவு நிலே, அவர்கள் விரும்பிப் படிக்கும் நூல்கள் ஆகியவற்றை . நன்கறிந்து அதற்கேற்ற நூல்களையும் பருவ மலர்களையும் 'வாங்கி வைத்தல் வேண்டும். இந்த இடத்தில் “பார்கோ' என்பவரது கருத்துக்களை நினைவிற் கொள்ளல் இன்றியமையாததாகும்.