பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

கோடுகளும் கோலங்களும்

பயலே? அது ஏற்கனவே கெட்டி, அத்தங்கெட்டு அறுத்துக் குளிச்சி நிக்கிது. ஒரு பொட்டப் புள்ள வேற, நீ ஏண்டா அங்க போற? இத்தினி நா நீ கன்னிப்பா, ஒழுக்கம்னு பேரெடுத்தவன். இப்ப ஏண்டா... அந்த மலத்த எடுத்துப் பூசிக்கிறே?ன்னு கெஞ்சிச்சி. அழுதிச்சி... பாவம்...”

“அவ என்ன சொன்னா?”

“த நீ என்ன எதெல்லாமோ கனாக்கண்டுட்டுப் பேசுற? எங்கே போனாலும் வந்து தொந்தரவு பண்ணுற. எனக்கு எங்கப் போகணும் எங்க வரணும்னு தெரியும். போற எடமெல்லாம் வந்திட்டு! என்று சண்டை போட்டான். கிழவி வுடல; ‘செவந்திக்கு சரோவக் கட்டி வூட்டோட வச்சிக்கணுமின்னு ஆசயிருக்குப்பா. அது புரிஞ்சி நாமும் நல்ல விதமா நடக்கணுமில்ல? என் ராசா... அந்தக் கழுநீர்ப் பான வாணாம்பா. நீ அங்க போவாதடா'... னிச்சி அதாங் கேட்ட...”

“ந்தா வேல்ச்சாமி, உனக்கு வெவகாரம் பண்ணணுமின்னா வேற எதானும் பேசு. ந்த மாதிரி ஏதானும் ரீல் வுட்டுட்டுத் திரியாத.”

இந்த வேல்ச்சாமி ஐந்து வருவடித்துக்கு முன்பே மாமன் மகளைக் கட்டினான். இவன் அம்மாவுக்கும் அவளுக்கும் மயிர்ப் பிடிச் சண்டை. கடைசியில் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போய் விட்டாள். மாமன் கட்டிட வேலை செய்பவன். இவனும் இந்த அறுபது சென்ட் பூமியை விட்டுவிட்டுத் தன்னுடன் வரவேண்டும் என்று தூபம் போடுகிறாள். இவன் அம்மா பையனைக் கொக்கி போட்டுப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். படிப்பு இல்லை. உழவு, அறுப்பு என்று போவதில் காசு இருக்கிறது. சுதந்திரமாகத் திரிய முடிகிறது. சாராயம் குடிப்பான். பெண்சாதிக்கும் இவனுக்கும் இது நிமித்தமே சண்டை.

“அதெல்லாம் இல்லக்கா. நா ஏ ரீல் வுடுற? நிசமாலும் சொல்ற... இவ இப்பல்லாம் வூட்டுக்கே போறதில்ல போல. கெழுவி வந்து அழுதிச்சி. அதாங் கேட்ட நீங்க சரோவக் கெட்டி வக்கிறதில எனக்கென்ன இருக்குது! ஆனா உரும இதுன்னு உங்க காதுல போட்டு வச்ச...”