பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குட்டு வெளிப்பட்டது!

ஒரு தமிழ் எழுத்தாளர் எழுதிய கதையை, மற்றொருவர் பாட்டாக எழுதி ஒரு பத்திரிகையில் வெளியிட்டு விட்டார். ‘என்னுடைய கதையைப் பாட்டாக்கித் தம் சொந்தப் பாட்டுப் போல் வெளியிட்டிருக்கிறார். என்று கதையை எழுதிய எழுத்தாளர் கோபப்பட்டாராம். இந்த விஷயம் புதுமைப் பித்தனுக்குச் சொல்லப்பட்டது. அவர் உடனே சொன்னார்: “அந்தக் கதையே காப்பிதான். கதையை எழுதியவரும், பாட்டை எழுதியவரும் ஒரு மூலத்திலிருந்து காப்பியடித்திருக்க வேண்டும். இதற்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன். ஒருவன் தன் மனைவிக்குத் தெரியாமல் தன் வைப்பாட்டியைப் பார்ப்பதற்காக இருட்டில் நடந்து சென்றான். அவன் மனைவியோ தன் கணவனுக்குத் தெரியாமல் தன் ஆசைநாயகனைப் பார்க்க அதே இருட்டிலேயே நடந்து சொன்றாள். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தெரியாமலே இருவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து விட்டார்கன். தன் ஆசைநாயகன் என்று மனைவியும், தன் ஆசைநாயகி என்று கணவனும் நினைத்து, இருட்டில் ஒருவர் கையை ஒருவன் பிடித்துக் கொண்டார்கள். பின்னர் கவனித்துப் பார்த்தபோது தான் இருவருக்கும் குட்டு வெளிப்பட்டது! அவர்களைப் போல, இந்த எழுத்தாளரும், கவிஞரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் போய்

13