பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கதை தானே

பிரபலமான ஒரு கவிஞர், தன் வாழ்க்கை வரலாற்றை ‘என் கதை’ என்ற பெயரில் எழுதி இருந்தார். புதுமைப்பித்தனிடம் ‘என் கதை’ எப்படி இருக்கிறது? என்றேன். அதற்கு அவர், “அது கதைதான்!” என்றார். [கதைக்கும் வரலாற்றுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை, நகைச் சுவையாகக் குறிப்பிட்டார்!]

ஒன்வே ட்ராபிக் அல்ல!

புதுமைப்பித்தன் ஒரு நண்பரோடு பழகிக் கொண்டிருந்தார்; அவருக்கு ஏதோ உதவியும் செய்தார். அந்த நண்பர் ஒரு சமயம் புதுமைப்பித்தனின் முக்கிய தேவைக்கு உதவாமல் மெளனமாக இருந்து விட்டார். அதைக் குறித்து புதுமைப்பித்தன் “நட்பு என்பது ஒன்வே ட்ராபிக் அல்ல!’ என்றார்.

எல்லோரையும் தாங்கும் பொறுப்பு

புதிதாக ஒரு லிமிடெட் கம்பெனி ஆரம்பமாகி இருந்தது. டைரக்டர்களுள் ஒருவர் அதிகப்படியான பணம் போட்டிருந்தார். அந்தக் கம்பெனியில். ஆனால் அவருடைய பெயர் எல்லோருக்கும் கடைசியில் [கீழே] ‘லெட்டர் ஹெட்’டில் அச்சிடப் பட்டிருந்தது. ஒரு சமயம் புதுமைப்பித்தனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது இந்தக் கம்பெனியைப் பற்றிய பேச்சு வந்தது. “அதிகப்படியான பணம் போட்டிருக்கிறதாகச் சொல்லப்படும் நபரின்

15