பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


12


ந்தக் கூட்டம் இவர்களுடைய அமாவாசைக் கூட்டம் போல் இல்லை. இதுவும் தான்வா பண்ணை மகளிர் கூட்டம் என்றுதான் சாந்தி கூறினாள். இவர்கள் வட்டத்துக்குள் இல்லை. செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் மாமண்டூர் சரகத்தில் நடக்கிறது. காலையிலேயே சாந்தி, பிரேமா, செவந்தி மூவரும் பஸ் ஏறி வந்திருக்கிறார்கள்.

விவசாயத் துறை அலுவலர், பெண்கள் முதலில் பேசினார்கள். பிறகு மதியம் அங்கு வந்திருந்த பெண்கள் அனைவரும் தத்தம் அநுபவங்களைச் சொல்கிறார்கள். செவந்தியையும் பேசச் சொன்னார்கள். அவளுக்கு வெட்கமாக இருந்தது. “சாந்தி நீ என்னைக் காட்டி வுடாதே. நீ பேசு...” என்றாள் கண்டிப்பாக.

அலுவலர் அம்மா ஒவ்வொருவர் பேரையும் சொல்லிக் கூப்பிடுகிறார். “பாப்பாம்மா... பாப்பாம்மாள் வந்து பேசுவார்...” என்ற அறிவிப்பு வருகிறது.

பாப்பம்மாவுக்கு இளம் வயசுதான். வெள்ளைச் சேலை உடுத்தி, நெற்றியில் துளி திருநீறு வைத்திருக்கிறாள். புருசன் இல்லாதவள் என்பதை அந்தக் கோலம் பறையடித்துத் தெரிவிக்கிறது.

“இந்தப் பாப்பம்மா அனுபவத்தைக் கேளுங்கள். அவ்வளவுக்கு மனசைத் தொடும்” என்று சாந்தி காதில் கிசுகிசுத்தாள்.

“வணக்கமுங்க... எனக்குப் பேசெல்லாம் தெரியாதுங்க. நாலாவது வரைதான் படிச்சேன். பொம்புளப்புள்ள எதுக்குப் படிக்கணும்னு நிறுத்திட்டாங்க. எங்கூட்டுக்காரர் லாரி ஓட்டிட்டிருந்தாருங்க. லாரி கவுந்து இறந்து போய்ட்டாருங்க. எனக்கு ரெண்டு புள்ளிங்க. ரெண்டு பொண்ணு. ஒண்ணுக்கு நாலு வயசு. மத்தது ரெண்டு வயசு, லாரியக் குடிச்சிட்டு