பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

 வங்கிஷம் என்றும், பரிசயம் என்பதை பரிட்சையென்றும் அனுபவம் என்பதை அனுபோகம் என்றும் கூறுகின்றனர்; இது தவறாகும்.

சில சம்ஸ்கிருத பதங்களை அவைகள் சமஸ்கிருத பதங்கள் என்று அறியாமலே உபயோகிக்கிறோம். உதாரணமாக-கசமாலம் என்று ஆதிதிராவிடர்களும் ஒருவரை ஒருவர் திட்டும்பொழுது உபயோகிக்கும் மொழி, கஸ்மலம் எனும் சம்ஸ்கிருத பதமாம். கட்டாயம் என்பது சம்ஸ்கிருத பதமாகிய கர்த்தவ்யம் என்பதின் மருவாம். அசங்கியம் என்பது அசஹ்யம் என்பதின் மருவாம். இவ்விதமே சென்னையில் துலுக்கர்கள் விற்கும் தாசனப் பொடி எனும் பதம் தசனப் பொடி என்பதாம். தசனம்+பொடி=தசனப் பொடி; தசனம் என்பது பல் எனப் பொருள்படும். சுத்த சமஸ்கிருத பதமாம். சிரஞ்சீவி என்பது சிரசீவி எனும் சமஸ்கிருத பதத்தின் மருவாம். (அன்றேல் சிரம்சசீவி=அம்பட்டன் எனும் பொருள்படும்) சாதாரண ஜனங்கள் இதை உபயோகிக்கும்பொழுது மரணமில்லாதவன் என்கிற அர்த்தத்தில் உபயோகிக்கின்றனர். சிரசீவிஎன்பதற்கு சம்ஸ்கிருதத்தில் நெடுங்காலம் ஜீவித்திருப்பவன் என்றுதான் அர்த்தம்.

சில சம்ஸ்கிருத மொழிகளின் அர்த்தத்தை நாம் அறிவோமாயின் அவைகளின் தமிழ் பிரயோகங்களின் கருத்தை நன்றாயறிந்தவர்க ளாவோம். 'பித்தலாட்டம்' என்பது பித்தலாடகம் என்பதின் மருவாம். பித்தலை +ஆடகம்=பித்தலாடகம் என்றாம், ஆடகம் என்பது ஹாடகம் எனும் சம்ஸ்கிருத மொழியாம்; அதற்கு பொன் என்று அர்த்தமாகும்; ஆகவே பித்தலாடகம் என்பதற்கு பித்தலையை பொன் என ஏமாற்றுதல், என்று அர்த்தமாகி, அதனின்றும் எல்லாவித ஏமாற்றுதலுக்கும் அப்பதமானது உபயோகிக்கப்படுகிறது என்று அறிவோம் தேகம் என்பது சம்ஸ்கிருதத்திலிருந்து வந்த பதமாம், இதை நாம் தேகம் என்றே உபயோகிக்கவேண்டியது. சிலர் இதை திரேகம் என்றும், மிகவும் இலக்கணமாக உபயோகிப்பதாகவெண்ணிக் கூறுவது தவறாகும்.

மேலும், ஒரே உருவையுடைய தமிழில்வழங்கப்படும் சில பதங்கள் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தனவாயின், ஒரு பொருளைக் குறிப்பன வாயும் சுத்த தமிழிலிலிருந்து வந்தனவாயின் மற்றொரு பொருளைக் குறிப்பனவாய் இருக்கின்றன. இதற்கு சில உதாரணங்களே ஆராய்வோம். கரி என்றால் யானை என்றும் பொருள்படும். அடுப்புக் கரியை