பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器等 லாம். உதாரணமாக புதுக்கோட்டை, கந்தர்வக் கோட்டை, கள்ளர் கோட்டை, பட்டுக்கோட்டை, தம்பிக்கோட்டை, முதலியவற்றை கூறலாம். சமுத்திரம் என்று முடியும் ஊர்களின் பெயர்கள் சமுத்திரம் என்ருல் கடல் என்று சாதாரணமாய் பொருள்படும், அம்பா சமுத்திரம், ரவண சமுத்திரம், தொர சமுத்திரம் முதலிய ஊர்களுக்கு அப்பெயர் ஏன் வநதது என்பது ஆராயத்தக்க விஷயம். பெரிய நீர்நிலைகளுக்கு சமுத்திரம் என்று பெயர் வந்திருக்கலாம். இங்கு பெரிய குளங்களிருந்தபடியால் அப்பெயர் வந்திருக்கலாம். பெரிய ஏரிகளுக்கு சாகரம் என்று பெயர் இருப்பதுபோல், கிருஷ்ண சாகர், உசெயின் சாகர் என்பவற்றைக் காண்க. மலையாளம் என்பது மலைகள் அதிகமாயுடைய தேசம் என்பது கூருமலே தெரியும். கர்னாடகம் என்பது கருமை நிறமுடையது என்று பொருள் படும். இங்குள்ள பூமி பெரும்பாலும் கருநிறமுடையதாயிருக்கிறது. கர்நாடகம் என்பதே கன்னடம் என்று மருவியதாம். இலங்கை என்பது லங்கா எனும் சமஸ்கிருத மொழியின் சிதை வாகும். லங்கா என்பதற்கு நான்கு புறமும் நீர் சூழ்ந்த பூமி என்று அர்த்தமாகும்; அதாவது தீவு. தற்காலம் ஆங்கிலத்தில் சிலோன் என்று கூறப்படும். தீவுக்கு இப்பெயர் வைக்கப்பட்டிருக்கிறது, இது ஒரு தீவு அல்லவா ? இதற்கு ஆதி காலத்தில் இரத்தின தீபம் என்று பெயர் இருந்தது; இதற்குக் காரணம் இங்கு முற்காலத்தில் இரத்தினங் கள் அதிகமாய்க் கிடைத்தபடியால் என்று கூறலாம்; தற்காலமும் அங்கு சில ரத்தினங்கள் கிடைக்கின்றன. சிலோன் எனும் ஆங்கில பதம் சிம்ஹளம் எனும் சமஸ்கிருத மொழியினின்றும் வந்ததாம். சிம் ஹளம், சிங்களம் என மருவியது. இப்பெயர் பாலிபாஷையில் சீஹளம் என்ருயது; இதனின்றும் சிலோன் எனப் பெயர் வந்தது. சிங்களத் திற்கு பழைய தமிழ்ப் பெயர் ஈழம் என்பதாம் (ஈழ தேசம் ஈழ மண்ட லம் என்பதைக் காண்க.) இத்தேசத்தவர்களுக்கு ஈழவர் என்று பூர் வீக பெயர் அன்றியும் இலங்கைக்கு நாக தீபம் என்று மற்ருெரு பெயர் உண்டு, நாகராஜாக்கள் இங்கு ஆண்டபடியால் அப்பெயர்