பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

 ஜாதியர் பேசும், தமிழும் மலையாளமும் கலந்த பாஷைக்கு மலை பாஷை என்றும் பெயர் இருப்பது குறிக்கத்தக்கது.


இந்த சந்தர்ப்பத்தில் தெலுங்கு முதலிய பாஷைகளிலிருந்து தமிழ் பதங்கள் உண்டாயிருக்கலாகாது என்றே கேள்வி பிறக்கக் கூடும்; அப்படி எண்ணுவதற்கில்லை என்பதற்கு சில உதாரணங்களைக் கருதுவோம். வெண்ண என்பது தமிழ் பதம், தெலிங்கில் இதற்கு வென்ன (இல்) என்று பெயர் ; வெண்ணெய் என்பதற்கு வெள்+நெய், என்று பிரித்து அர்த்தம் கூறலாம். வென்ன என்பதற்கு அவ்வாறு அர்த்தம் கூறமுடியாது; இங்ஙனமே, தேங்காய் என்பது தெங்கின்காய் என்பதாம் (சிலர் இது தென் +காய் தேங்காய் என்றுயது என்று கூறுவாருமுளர்) இதற்கு தெலுங்கு பதமாகிய டெங்காய் என்றும் பதத்தை அவ்வாறு பிரித்து அர்த்தம் செய்யமுடியாது.


மற்ற உதாரணங்கள்:-சோம்பேறி, தமிழ்-சேரமாரி தெலுங்கு: சிற்ருெலி-சிட்டெலுகா, இங்ஙனமே ஊறுகாய் எனும் தமிழ் பதத்தையும் ஊறுகாய எனும் தெலுங்கு பதத்தையும் உணருங்கள். இந்த தமிழ் மொழி பேசுபவர்கள் 1921 ஜனத் தொகைக் கணக்கின்படி 25 மிலியனும். தற்காலம் தமிழ்மொழி வழங்கும் ஜில்லாக்கள் சென்னை ராஜதானியில் செங்கல்பட்டு, தஞ்சாவூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென் ஆற்காடு, கோயமுத்தூர், சேலம், சித்துர், கெல்லூர் ஜில்லாக்களின் சில பாகம், அன்றியும் இலங்கைத் தீவில் யாழ்ப்பாணம், கொழும்பு முதலிய இடங்கள். மேலும் ரங்கூன், பினங்கு, சிங்கப்பூர், மோரீசு (Mauritius) முதலிய இடங்களிலும் வழங்குகிறது. அன்றியும் பெங்களுர், பல்லாரி, சிகந்தராபாத் முதலிய ராணுவங்கள் தங்குமிடங்களிலும் கொஞ்சம் வழங்கப்படுகிறது.


நமது தமிழ் பாஷையில் 58500 மொழிகள் இருப்பதாக ஒருவாறு கணக்கிடப்பட்டிருக்கிறது. இங்கு நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் மனிதர்களால் சாதாரணமாக பேசப்பட்டு வரும் பாஷைகள் எந்நேரமும் மாறிக்கொண்டேயிருக்கும். தமிழ் மொழியிலும் இந்நியாயப்படி, புராதனமான சில மொழிகள் வழக்கற்று மடிந்து போயிருக்கவேண்டும், நூதனமான பல மொழிகள் பிறந்திருக்கவேண்டும் என்பதற்குச் சந்தேகமில்லை, இது ஒரு பாஷையின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாம்.