பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தம்வசம் சுருட்டி வைத்திருக்கின்ற ‘குற்றம் சொல்லல்’ பட்டியலைக்கொண்டு வெறும் தத்துவங்களைச் சரமாரியாக ஒப்பிக்க-ஒப்புவிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

இந்த புண்ணியாத்மாக்கள்தாம் சகலகலா வல்லவர்களாம்!

இவர்கள் கையினால்தான் இலக்கியம் பால்-பவுடர் பால் உண்ணுகிறதாம்!

இவர்கள் அன்றிருந்து சொல்லிக்கொண்டிருக்க வில்லையா?

நாமும் இன்றுவரை கேட்டுக்கொண்டிருக்க வில்லையா ?

சிந்தனைச் சீர்திருத்தக்காரர் இந்த கோல்ரிட்ஜ், அவர் சொன்ன ‘வெள்ளை மொழி’ ஒன்று என் பேனாவின் வழியை மறிக்கிறது.

“பொதுவாக, விமரிசகர்கள் என்பவர்கள் அனைவருமே தம்மால் முடிந்திருந்தால், கவிஞர்களாகவோ, சரித்திர ஆசிரியர்களாகவோ ஆகியிருக்கக்கூடியவர்கள் தாம். அவர்கள் தங்கள் திறமைகளைப் பல்வேறு துறைகளிலும் சோதனை செய்து பார்த்துத் தோல்வி கண்டுவிட்டார்கள். எனவேதான், அவர்கள் விமரிசகர்கள் ஆகிவிடுகிருர்கள்.


‘வாலிபனும், வாலிபியும்’

க. நா. ச. அவர்களைப்பற்றி உங்கள் அனைவருக்கும் துல்லியமாகத் தெரியும் ‘குறிஞ்சிமலர்’ பற்றி அவர் ஒரு

48