பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பட்ட கையில் பேனாவைப் பிடிக்கலாமோ? தம் தோல்வியை தமிழ்ப் புதின உலகின் தோல்வியாக ஆக்கிவிடுகிறார்; ஆனால் ஓர் இரகசியம்: க. கா. சு. ஒருநாளும் காந்திஜியாக முடியாது!

பாத்திர அமைப்பைப் பற்றிப் பிறருடைய நவீனங்களில் குறைகாணும் திரு க.நா.சு. தம் பெயரை அறவே மறந்து விடுகிறார். தம் சொந்தக் கருத்துக்களுக்குப் பிறர் நூல்களை மேடையாக்கி ‘அதிகப் பிரசங்கம்’ செய்கிறவர் இவர். தமிழ் நூல்களை முறையாகக் கற்றுத் தேர்ந்து தெளிந்து,இப்போது தமிழ்வளர்க்கும் தகைமையாளர்களாக நம்மிடையே திகழ்ந்து வருபவர்கள் சிலரை வம்புக்கு இழுத்திருக்கிறார்: தமிழ்ஞானம் எழுத்தாளனுக்கு அறிவைக் கொடுக்காது என்பது இவர் வாதம். இது 'முடக்கு வாதம்!' ‘நளினி’யைப படித்து மூடிக்க ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வோர் அரையணா எனக்குச்செலவு ஆயிற்று. திரு க. நா. சு-வின் தமிழ் நடையைப் படிக்கிறீர்களா?

‘...லீவு கிடைத்த சந்தர்ப்பத்திலே, தன் சகோதரியைப் பார்த்து எவ்வளவோ நாள் ஆகிறதே, பார்த்துவிட்டு, அவளுடன் இரண்டொரு நாள் தங்கிவிட்டுப் போகலாம் என்று எண்ணி வந்திருந்தான் சீதாராமன்,’

உன்னிப்பாகப் படியுங்கள். ‘விரசம்’ தட்ட வில்லையா?

இன்னும் பாருங்கள்:

‘...ஆனால் அதெல்லாம் ஏதோ காவியம் படிப்பது போல அவர்கள் உள்ளத்தைத் தொடாமல் போய் விட்டது!’

அமரர் புதுமைப்பித்தனின் ஒப்புவமை எந்த மூலை, போங்கள்!

94