பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை 6 I

முல்லைப்பாட்டு நெடுநல்வாடை ஆகிய பாட்டுகள் அகப்பொருள பாடுவதையே பெரும் நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் பட்டினப்பாலை புறப் பொருளுக்கு முதன்மை தந்துள்ளது. ஆயினும் பாட்டின் முத்தாய்ப்பு அகப்பொருளுக்கு அணி சேர்க்கின்றது. காவிரிப்பூம்பட்டினத்தின் பல்வேறு சிறப்புக்களையும் விரிவாகக் கூறிக்கொண்டுவந்த புலவர் இறுதியில் அக் காவிரிப்பூம்பட்டினத்திலும் தலைவி மேலானவள் என்று தலைவன் கருதுவதாக அகப்பொருளுக்கு உயர்வு தருகின்றார். எனவே, அகப்பொருளும் பட்டினப்பாலை யில் பின்னிப் பிணைந்துள்ளன எனக் கூறலாம்.

காவிரிப் பேரியாற்றின் சிறப்பு, சோழ நாட்டு மருத நில வளம், பாக்கத்து அமைப்பு, படப்பைச் சோலை, அட்டிற்சாலைகள், பெளத்தப் ப ள் எளி க ள், பல்வேறு கோட்டங்கள், பரதவர் குடியிருப்புகள், புறஞ்சேரி, காவிரி நீர்த்துறை, வைகறையாம நிகழ்ச்சிகள், உல்கு வசூலிக்கும் திறம், பண்டசாலை முற்றம், அங்காடித் தெருக்கள், கடைகளின் மேற்பறக்கும் பல்வேறு கொடிகள், தெருக்கள், வேளாண் குடி மக்களின் விருந்தோம்பலில் சிறந்த பெருவாழ்வு முதலிய இன்னோரன்ன செய்திகள் விளக்கமாக இப்பட்டில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

குடகுமலையிற் பிறந்து தமிழ்நாட்டிற் பாய்ந்து கீழ்க் கடலிற் கலக்கும் காவிரி, சோழநாட்டின் கரைகளிலே பொன்னை ஒதுக்குவதாகக் குறிப்பிடுகின்றார் கடியலூர் உருத்திரங்கண்ணனார். ‘வான் பொய்ப்பினும்தான் பொய்யாக் காவிரி’ என்று காவிரியாறு எக்காலத்திலும் பொய்ப்பதில்லை என்ற உண்மையை ஒதுகின்றார்.

வசையில் புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புள்தேம்பப் புயல்மாறி