அடைநெடுங் கல்வியார்

விக்கிமூலம் இலிருந்து

அடைநெடுங் கல்வியார்[தொகு]

புறநானூறு- 283[தொகு]

திணை: தும்பை; துறை: பாடாண்பாட்டு[தொகு]

ஒண்செங் குரலித் தண்கயங் கலங்கி
வாளை நீர்நாய் நாளிரை பெறூஉப்
பௌவ வுறையள வா... ....
.... .... ....வி மயக்கி
மாறுகொண் முதலையொ டூழ்மாறு பெயரு
மழும்பி லனடாங்கா றைகுயு மென்றும்
வலம்புரி கோச ரவைக்களத் தானு
மன்று ளென்பது கெட... .....
.... .... ..ஈனே பாங்கற்
கதிர்சூழ் குறட்டின் வேனிறத் திங்க ( )
வுயிர்புறப் படாஅ வளவைத் தெறுவரத்
தெற்றிப் பாவை திணிமண லயரு
மென்றோண் மகளிர் நன்று புரப்ப
.... ..... ...ண்ட பாசிலைக்
கவிழ்பூந் தும்பை நுதலசைத் தோனே.


புறநானூறு: 344[தொகு]

திணை: காஞ்சி; துறை: மகட்பாற் காஞ்சி[தொகு]

செந்நெ லுண்டபைந்தோட்டு மஞ்ஞை
செறிவளை மகளி ரோப்பலிற் பறந்தெழுந்து
துறைநணி மருதத் திறுக்கு மூரொடு
நிரைசால் விழுப்பொருள் தருத லொன்றோ
புகைபடு கூரெரி பரப்பிப் பகைசெய்து (5) ( )
பண்பி லாண்மை தருத லொன்றோ
விரண்டினு ளொன்றா காமையோ வரிதே
காஞ்சிப் பனிமுறி யாரங் கண்ணி...
கணிமே வந்தவ ளல்குலவ் வரியே.


புறநானூறு: 345[தொகு]

திணை: காஞ்சி; துறை: மகட்பாற் காஞ்சி[தொகு]

களிறணைபக் கலங்கின காஅ
தேரோடத் துகள்கெழுமின, தெருவு
மாமறுகலின் மயக்குற்றன, வழி
கலங்கழாஅலிற் றுறை கலக்குற்றன
தெறன்மறவ ரிறைகூர்தலிற் (5) ( )
பொறைமலிந்து நிலனெளிய
வந்தோர் பலரே வம்ப வேந்தர்
பிடியுயிர்ப் பன்ன கைகவ ரிரும்பி
னோவுற ழிரும்புறங் காவல் கண்ணிக்
கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை (10)
மைய னோக்கிற் றையலை நயந்தோ
ரளியர் தாமேயிவள் தன்னை மாரே
செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி
நிரலல் லோர்க்குத் தரலோ வில்லெனக்
கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர் (15) ( )
குழாஅங் கொண்ட குருதியம் புலவொடு
கழாஅத் தலையர் கருங்கடை நெடுவே
லின்ன மறவர்த் தாயினு மன்னோ
வென்னா வதுகொல் தானே
பன்னல் வேலியிப் பணைநல் லூரே. (20)

பார்க்க[தொகு]

அகர வரிசையில் சங்க இலக்கியம்


"https://ta.wikisource.org/w/index.php?title=அடைநெடுங்_கல்வியார்&oldid=475823" இலிருந்து மீள்விக்கப்பட்டது