பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பெண் ஒருத்திக்குத் துன்பம் வந்தால், கவிகளுக்குப் பொறுக்காதாம்! பூரணி விபத்துக்குள்ளானதைப் படம் பிடிக்க ஒரு புகைப்பட நிபுணன் வரவேண்டாம், கடைசிப் பட்சமாக, கவிஞன் யாராவது வரக்கூடாதா?

நம்பிக்கைகள் எப்போதும் வீண் போவதில்லை.

வாழ்க்கையையே விபத்தாகக் கருதிவிடும் அளவிற்குத் துணிவு பெற்றவள் பூரணி. அவள் மயங்கி விழுந்த நேரத்தில், அவளுடைய அரவிந்த முகம் கண்டு பாட்டுப் புனய அங்கே கவி ஒருவனும் இருந்தான். அரவிந்தன் என்பார்கள். அவனும் பூரணிக்கு இணையான ஓர் இலட்சியப் பித்தன். பாட்டு மட்டுந்தான் பாடத் தெரியுமென்தில்லை; அவன் ‘மீனாட்சி அச்சகத்தின்’ உயிர்நாடி மட்டு மல்லன்; சிந்திக்கப் பழகிய புள்ளி. உயர்ந்த கோபுரங்களைக் காணும்போதெல்லாம் அவனுக்குத் தாழ்ந்த உள்ளங்களும் நினைவில் முனை காட்டும். அவனுக்குத் தன்னைப் பற்றி அக்கறை கொள்ளத் தெரியாது. ஆனால், தான் ‘அவதரித்த’ தாய்த் திருநாட்டைப்பற்றி இருபத்து நான்கு மணி நேரமும் கவலைப்படத் தெரிந்து வைத்திருந்தான். தொட்டதற்கெல்லாம் பொன்மொழிகளாகக் கொட்டித் தள்ளுவான்; தொடாதவற்றிற்கு இருக்கவே இருக்கின்றன, நாட்குறிப்புத் தாள்கள். ஆக, அவன் ஒரு தனிப்பிறவி. கபிலர் அறிவுரை அனுப்பியதற்கேற்ப ‘இளமையை மூப்பென்று’ உணரத் தலைப்பட்டானோ, என்னவோ? ஆனால் அவனைப்பற்றி ஒன்றை உறுதி செய்ய முடிகிறது. இவன் நொடிக்கு நூறு கேள்வி கேட்கிறான்; வாய்ப்பு முகமன் கூறுமிடத்தே, சமுதாயத்தின் மீது குற்றப்பத்திரிகை படிக்கிறான்; எஞ்சிய நேரத்தில், தத்துவ போதனைகளை அர்ப்பணிக்கிறான்! எமர்ஸன்

54