பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை 63

அத்தகைய வீடுகளின் முற்றங்களில் நெல்லைக் காய வைத்து இளம்பெண்கள் காவல் புரிகின்றனர். காய்கின்ற நெல்லைக் கொத்தவரும் கோழிகளை அவர்கள் தங்கள் காதுகளில் அணிந்திருக்கும் பொற்குழைகளைக் கழற்றி வீசி விரட்டுகின்றனர்.

அழகிய நெற்றியும் மடநோக்கும் கொண்ட இளைய மகளிரால் அவ்வாறு எறியப்பட்ட பொற்குழழைகள் முற்றத்திலே சிதறிக் கிடக்கின்றன. அவை சிறுவர் உருட்டிச் செல்லும் மூன்று உருளைகளையுடைய சிறுதேரைத் தடுக்கின்றன.

அகல்நகர் வியன்முற்றத்துச் சுடர்நுதல் மடநோக்கின் நேரிழை மகளிர் உணங்குஉணாக் கவரும் கோழி எறிந்த கொடுங்கால் கணங்குழை பொன்கால் புதல்வர் புரவியின்று உருட்டும் முக்கால் சிறுதேர் முன்வழி விலக்கும் விலங்குபகை அல்லது கலங்குபகை அறியாக் கொழும்பலகுடிச் செழும்பாக்கத்து

-பட்டினப்பாலை : 20 - 27

காவிரிப்பூம்பட்டினத்தில் அழகிய தோட்டங்கள் பல அமைந்துள்ளன. அத்தோட்டங்களைச் சூழ்ந்து உப்பங் கழிகள் பல உள்ளன. இவ்வுப்பங் கழிகளில் படகுகள் பல வ ரி ைச யாக க் கட்டப்பட்டுள்ளன. சோழ நாட்டில் உப்பை விற்று அதற்குப் பதிலாக நெல்லை ஏற்றிவந்த படகுகளே அவை. புதுவருவாய் தரும் தோப்புகளும், அவற்றின் அணித்தேயுள்ள பூஞ்சோலை களும், ஆழமான பொய்கைகளும், இம்மையிலும், மறுமை யிலும் காம இன்பத்தை நல்கும் ஏரிகளும் காவிரிப்பூம் பட்டினமெங்கும் நிறைந்து காணப்புடுவதாகக் கடிலுார் உருத்திரங்கண்ணனார் குறிப்பிடுகின்றார்.