பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மா தவம் புரிவாள் 110 தலைபோல் இருக்கும் கொட்டைப் பாக்குக்கு இப்பெயர் இருக்கலாமோ என்னவோ! இத்தகைய பாக்குடன் வெற் றிலையை இடுப்பு வயிற்றுத் துணி மடியில் வைத்திருக்கும் தோற்றம் குருவிபோல் தெரிவதால், மடிக்குருவி என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம். கூட்டில் இருக்கும் குருவிபோல், வெற்றிலை மடியில் இருக்கும் குருவியாகும். 1.1.இ. மடி குருவி மடிக் குருவி என்பதற்கு, மடியில் உள்ள குருவி என்று பொருள் செய்யின், அத்தொடர், இலக்கணத்தில், ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை நிலைத் தொடர் எனப்படும். இடையிலே'க்' என்னும் ஒற்றுமிகுக் காமல், மடி குருவி என்று கூறின், இந்தத் தொடர் வினைத் தொகை எனப்படும். எந்த வினைத் தொகை யிலும் இடையே ஒற்றுமிகாது என்பது ஒருவகைப் புணர்ச்சி விதி. மடி குருவி என வினைத் தொகையாக வைத்துப் பொருள் கொள்ளின், சுருட்டி மடக்கி மடித்து மடியில் வைத்திருக்கும் குருவி என்றோ, மடித்து வாயில் போட்டுக் கொள்ளும் குருவி என்றோ பொருள் கொள்ளலாம். பொதுவாக, வெற்றிலையை மடித்துப் போட்டுக் கொள்வது என்று சொல்வதே மரபு. குறிப்பிட்ட ஒருவர் வாயில் வெற்றிலை போட்டுக்கொள்ள, அவர்தம் மனைவியோ அல்லது பணியாளோ வெற்றிலை மடித்துக் கொடுப்ப தாகக் கூறும் மரபு வழக்கு அறிந்ததே! இக்காலத்தில் பீடா செய்வோர் வெற்றிலையை மடித்துத் தானே செய்கின்றனர்! 1.1.ஈ. மடிக் குருவி மடித்துக் கொடுப்பது என்னும் பொருளில் மடிக் குருவி என இடையே'க்' என்னும் ஒற்று மிகுத்துச்