பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 97 விகாசச் செடி-அக்கினிச் சிவச் செடி, மயிலமேனிச் செடி, இந்திரை மேனி-ஊருடன் முதலியார்-கடிப்பாங்கிச் செடிபூனைப் பகைச் செடி - பூனை வணங்கிச் செடி - பயிலிய மேனிச் செடி-முறை மயக்கிச் செடி-பேய்ப் பலாதிக் கீரை என்பனவும், சா.சி.பி. அகர முதலியில் மற்ற பெயர்களும் குப்பை மேனிக்கு உரியனவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 10.2 பொருட் பண்பு நூற்பெயர்கள் குப்பை மேனியின் செயல்-பண்பு கருதி, முருகேச முதலியாரின் பொருட் பண்பு நூலில் பின் வரும் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன: துயர் அடக்கி, புழுக் கொல்லி, பெருமலம் போக்கி, சிறு நீர்ப் பெருக்கி, வாந்தி உண்டாக்கி, கோழை அகற்றி, குதம் உண்டாக்கி - என்பனவாம். இவற்றின் பெயர்க் காரணம் சொல்லாமலே விளங்கும். 10.3 பிற மொழிப் பெயர்கள் GS6PäG – Gül? GNFLG) (Kuppi Chettu) மலையாளம் - குப்ப மணி (Kuppa-mani) கன்னடம் - குப்பி கிதா (Kuppigida) @ö@ (Hindi)— Gililo (Kuppi) ourisтетih (Beng) (515 (Kupi) மேலே குறிப்பிட்டுள்ள குப்பை மேனியைக் குறிக்கும் சில மொழிப் பெயர்கள், குப்பை என்பதற்கு உரிய வேர்ச் சொல்லைத் தாமுங் கொண்டு தமிழோடு ஒத்திருத்தல் குறிப்பிடத் தக்கதாகும்.