பக்கம்:மருதநில மங்கை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10


ஊடலும் கூடலும்

னையற மாண்புணர்ந்த ஒரு மருத நிலப் பெண், தன் மனம் விரும்பும் நெய்தல் நிலத்து இளைஞன் ஒருவனை மணந்து, அவனோடு கூடி இல்வாழ்க்கை மேற்கொண்டு இன்புற்று வாழ்ந்திருந்தாள். வந்த விருந்தினரை வரவேற்றுப் பேணுதல் இல்லறத்தார்க்குப் பேரறமாம். தாம் பொய் உரையாதும், பொய்யுரைப்பாரைக் காணின் அஞ்சுவதும், அறங்களில் தலையாய அறமாம். தன்னை மணந்த கணவன் துயர்க்குத் தான் காரணமாகாமை மனையறத்தின் மங்கலமாம் எனக் கருதும் உயர்ந்த உள்ளம் உடையவள் அவள். அத்தகையாள், அறிவே உருவாய் வந்த தன் ஆருயிர்த் தோழி துணை செய்ய, இல்லற நெறியில் இம்மியளவும் பிழை நேராவாறு பெருவாழ்வு வாழ்ந்திருந்தாள். இவ்வின்பச் சூழ்நிலையில், அவர்கள் வாழ்க்கையில் ஒரு சில ஆண்டுகள் கழிந்தன. அவர்களுக்கு ஓர் ஆண் மகனும் பிறந்தான். தாம் பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/65&oldid=1129504" இலிருந்து மீள்விக்கப்பட்டது