பக்கம்:மருதநில மங்கை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68புலவர் கா. கோவிந்தன்


மாண்பும் அவனை ஏற்றுக் கொள்ளச் செய்து விடுகின்றன. அதனால் அவனை ஏற்றுக் கொள்கிறேன். கொடுமை புரியினும், இல்லறக் கடமை கருதி, அவனை ஏற்றுக் கொள்ளும் நான், அவன் பரத்தமைக் கொடுமை கண்டு கலங்காதிருக்கவில்லை. கலங்கி, நாள்தோறும் கண்ணீர் விடுகிறேன். ஆயினும், கடமை கருதி அவனை வெறுத்திலேன் !” என்று கூறித் தன் மனையற மாண்பையும், மனத் துயர்க் கொடுமையையும் ஒருங்கே புலப் படுத்தினாள். வாழ்க அவள் உள்ளம் !

“நீரார் செறுவில் நெய்தலொடு நீடிய
நேர்இதழ் ஆம்பல் நிரைஇதழ் கொண்மார்,
சீரார் சேயிழை ஒலிப்ப ஓடும்
ஓரைமகளிர் ஓதை வெரீஇ எழுந்து,

ஆரல்ஆர்கை அம்சிறைத் தொழுதி 5
உயர்ந்த பொங்கர் உயர்மரம் ஏறி,
அமர்க்கண் மகளிர் அலப்பிய அந்நோய்,
தமர்க்கு உரைப்பனபோல் பல்குரல் பயிற்றும்
உயர்ந்த போரின் ஒலிநல் ஊரன்,

புதுவோர்ப் புணர்தல் வெய்யன் ஆயின், 10
வதுவை நாளால் வைகலும், அஃதுயான்
நோவேன் தோழி! நோவாய்நீ என
எற்பார்த்து உறுவோய் சேர்இனித் தெற்றென,

‘எல்லினை வருதி, எவன்குறித்தனை?’ எனச்
சொல்லா திருப்பேனாயின், ஒல்லென 15
விரிஉளைக் கலிமான் தேரொடுவந்த
விருந்து எதிர்கோடலின் மறப்பல் என்றும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/70&oldid=1129515" இலிருந்து மீள்விக்கப்பட்டது