பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


எங்கு எது நடந்தாலும் எல்லாம் அவருக்குத் தெரியும்: அவர் தூணிலும் இருப்பார்-துரும்பிலும் இருப்பார். ஆனால் அவரை வெளிப்படையாக எளிதில் காண வியலாது; எல்லாரும் காணவியலாது. அரும்பாடுபட்டு அவரை வழிபடுவோரும்-அவருக்குத் தொண்டு புரிப வரும்-தியானிப்பவரும்-தவம் புரிவோரும்-யோகம் செய்பவரும் ஆகிய அணுக்கத் தொண்டர்களே அவரைக் காண முடியும்; ஆழ்ந்த அன்பர்களே அவரை நேரில் கண்டு களிக்க முடியும்.


‘கண்டவர் விண்டிலர்-விண்டவர் கண்டிலர்’ என்பது முதுமொழி. எனவே, கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரியாததால் கடவுள் இல்லை என்று கூறமுடியாது. கடவுள் மறைந்துள்ளார். விறகுக்குள் தீயும், பாலுக்குள் ந்ெய்யும் எள்ளுக்குள் எண்ணெயும் மறைந்திருப்பது போல் கடவுள் நமக்குள்ளேயும் மறைந்துள்ளார். தீக்கடை கோலால் கடைந்து தீயை வெளிப்படுத்துதல் போல, மத்தால் கடைந்து பால்-தயிரிலிருந்து நெய்யை வெளிப்படுத்துதல் போல, உறவு (பக்தி) என்னும் கோல் நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைந்தால் கடவுள் தம் முன் வந்து நிற்பார்-என்றெல் லாம் ஆத்திகர்கள் கூறுகின்றனர். கடவுளை வெளிப்படச் செய்யும் முயற்சியைப் பற்றிய பாடல் ஒன்று திருநாவுக்கரசர் தேவாரத்தில் உள்ளது. -

[1]

*“விறகில் தீயினன் பாலில் படுநெய் போல்
மறைய கின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல் கட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் கிற்குமே”


  1. திருநாவுக்கரசர் தேவாரம்-பொது-தனித்திருக் குறுந்தொகை.