பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


இரண்டாவது :- 1982-83ஆம் ஆண்டு காலத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தொகுப்பியல் துறைப் பேராசிரியராகவும் தலைவராகவும் யான் பணி யாற்றிய போது, ஒவ்வோர் உடற் கூற்றுத் துறையிலும் வல்ல மருத்துவர்கள் (டாக்டர்கள்) சிலரைப் பல்கலைக் கழகம் அழைத்து ஒரு கருத்தரங்கம் நடத்தியது. அப்போது மருத்துவர் ஒருவர் சொற்பொழிவாற்றிய போது. மனம் என ஒன்று தனியே இல்லை; மூளையின் இயக்கமே மனம் என்னும் எனது கருத்தைத் தற்செயலாகக் குறிப்பிட்டார். உடனே யான் எழுந்து, மனம் என்பது மூளையின் இயக்கமே என்று கூறினீர்கள் - அது பொருத்தமே - அதே போல் உயிர் என ஒன்று தனியே இல்லை-இதயத்தின் இயக்கமே உயிர் என்றும் கூறலாம் அல்லவா?-என்று வினவினேன். அதற்கு அவர், அரை குறை மனத்தோடு ஒப்புக் கொண்டவர் போல் அப்படியும் கூறலாம்-என்று மொழிந்தார். இச்செய்தி ஈண்டு ஒப்பு நோக்குதற்கு உரியது.