பக்கம்:காதல் மனம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் மணம்6



சேகரன் கூறினான். யாரோ ஒருத்தன் நம்ம சாதிக்குக் குலகுருவாம்; அவன் நாளேக்கு நம்மவூருக்குவரப்போறானாம்;அவன் காலிலே நாமெல்லாம் வெட்கமில்லாமல் விழப்போறோமாம்; பணம் தரு வோமாம். மூடத் தனமாக மனிதனின் கால் கழுவிய தண்ணீரை நாமெல்லாம் மகாப் பிரசாதமென்று. குடிப்போமாம். அவன் பெரிய அயோக்யனனாம். இன்னும் என்னென்னமோ கேவலமாகப் பேசமரானப்பா செல்வன் பள்ளிக்கூடப் பையன்களெல்லாம் சிரிக் கிராங்க.'சிறுவனின் வாடியமுகத்தைக் கவனித்தார் தந்தை


சேகரனின் சொற்கன்,பாலசுந்தரத்தின் மனத் தைச் சிறுசிறு அம்புகளாகத் துளைத்தன. கோபம் கொப்பளித்து அவர் கண்களைச் சிவக்க வைத்தது. சேகரனே முறைத்துப் பார்த்தார். அவனது களங்கமற்ற பார்வை, மாசமறுவற்றவதனம், ஒரு தந்தையின் கடமையை அவருக்கு நினைவூட்டின. கோபம் சற்றுக் தணிகந்தது; சாந்தமாகக் கூறினார், சேகர்! செல்வனின் அப்பா மாணிக்கம் ஒரு நாஸ்திகன். சாமியில்லை, பூகமில்லை, சாஸ்திரயில்லை என்று சொல்லித்திரிபவன்; பக்தியில்லாதமூர்க்ன். அப்பன் புத்திதானே மகனுக்கும் வரும்? செல்வன் ஒரு நாஸ்திகக் குஞ்சு, அவர்கள் பேசுவதெல்லாம் முட்டாள்தனம்-குறும்புத்தனம்! அந்தப் பயல்கள் சாவகாசமே உனக்கு வேண்டாம். நீயும் கெட்டுப் போவாயடா’ அவரது குரல், நெஞ்சில் எரியும் ஆக்


திரத்தைக் காட்டிற்று.


"ஆமாம். குலகுரு என்றால் யாரப்பா? அவருக்


என்ன வேலை? எவ்வளவு படித்திருப்பார்?' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/9&oldid=1411604" இலிருந்து மீள்விக்கப்பட்டது