பக்கம்:பதினாறும் பெறுக.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2

2

இளங்கோ : (மகிழ்ந்து கைகொட்டி) பலே! பலே! பாட்டு மிகப் பிரமாதம்! நாட்டியம் அதைவிடப் பிரமாதம்!

கமலவேணி : (வியந்து)அடடே! வா தம்பி இளங்கோ இந்த குறல்நெறிப் பாடலும், ஆடலும் உண்மையாகவே உனக்குப் பிடிக்கிறதா? உபச்சாரத்திற்குப் புகழ்கிறாயா?

இளங்; இதென்னம்மா! இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? மனதிலொன்று வாக்கிலொன்று வைப்பவன் நானல்லவே!

கமல: நீயொரு கல்லூரி மாணவன் தானே?

இளங்: ஆமாம் அதனால்?

கமல: ட்விஸ்டு, பால்ரூம் டான்ஸ், ராக்அண்ட்ரோல் நாட்டியங்களை ரசிப்ப தல்லவோ கல்லூரி மாணவனுக்கழகு?

இளங்: ஆமாம்! இல்லை, இல்லை, எனது நண்பர்கள்தான் அப்படி நான் இல்லை. எனக்குப் பண்புள்ள தமிழிசையும், பரதநாட்டியமும் மிகவும் பிடிக்கும்.

கமல: நிரம்ப மகிழ்ச்சி புளிக்கும் பழக்கடையில் ஒரு இனிப்பான மாம்பழமும் இருக்கிறது.

தாழம்பூ: அம்மா, அம்மா.

கமல: என்னடி தாழம்பூ?

தாழம்பூ: இந்த மாம்பழம் முழுவதும் இனிப்பென்று நீங்கள் நம்பி விடாதீர்கள்! இந்த இனிப்புப் பழத்தின் மேல் பழமை என்ற கசப்பான தோல் மூடியிருக்கிறது. கலைகளிலே புதிய கருத்துக்களை இணைக்கக்கூடாது என்பவர் இவர்.

கமல: அப்படியா இளங்கோ? புதிய கருத்துக்களை வெறுக்கிறாயா நீ?.

இளங்: நல்ல புதிய கருத்துக்களை நான் வெறுக்கவில்லை என்றாலும் அவற்றை நுழைத்து கலைகளை மாசு படுத்துவது பிடிப்ப தில்லை. கலை கலைக்காகத்தானே வளரவேண்டும்.

கமல: நீ கருத்தில்லாத கலையை விரும்புகிறாய். நல்லது. இராமாயண காவியம் எதற்காக உண்டாயிற்று?

இளங் : (யோசித்து) நீதியை உணர்த்திட

கமல: தியாகராஜர் இசைப்பாடல்களை எதற்காக இயற்றினார்.

இளங்: பக்தியை வளர்த்திட,

கமல: முன்னோர்கள் அரிச்சந்திர நாடகத்தை ஏன் எழுதினார்கள்?

இளங்: சத்தியம் காத்திட

கமல: நீதியை உணர்த்தல், பக்தியை வளர்த்தல், சத்தியம் காத்தல் போன்ற கருத்துக்களைக் கலைகளில் புகுத்தியது குற்ற மல்லவா? கருத்தற்ற கலையல்லவோ வளரவேண்டும்?

இதுவரை அப்படி வளர்ந்திருக்கிறதா? வளர்க்க முடிந்தால் இனியும் வளர்க்க முடியுமா? யோசித்துப் பார்.