பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


ஆக்கி அரித்துப் படைத்தல்

மேற்கூறிய இருவேறு நாள்களிலும் படைக்கும் படையலை ஆக்கி அரித்துப் படைத்தல்’ என்னும் ஒருவகை மரபுப் பெயரால் வழங்குதல், தமிழ்நாட்டுத் தென்னார்க்காடு மாவட்டத்தில் இன்றும் உள்ளது. ஆக்கி அரித்துப் படைத்தல்’ என்றால், பல வகைப் பச்சை உணவுப் பொருள்களைத் தீ மூட்டிய அடுப்பிவ் ஏற்றிப்பதம் செய்து-சமையல் செய்து-படைத்தல் என்று பொருளாகும். இந்தப் பெயரிலிருந்து அறியக் கூடியதாவது: :-மக்கள் ஒரு காவற்தில், உணவுப் பொருள்களைத் தீ மூட்டிய அடுப்பில் வைத்துப் பதம் செய்து படைக்காமல், பச்சையாகவே கடவுளுக்குப் படைத்தனர் என்பதாகும். கம்பங்கதிர், சோளக்கதிர் முதலியவற்றைப் பச்சையாகவே வைத்துப் படைப்பது இன்றும் உண்டு. ஈண்டு, மாங்குடிகிழார் என்னும் புலவர் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் (335) ஒன்றில் காணப்படுகின்ற

“கெல் உகுத்துப் பரவும் கடவுள்”

என்னும் பகுதி ஒப்பு நோக்கத்தக்கது. பச்சை நெல்லை வைத்துப் படைத்த பண்டைய பழக்கம் இதனால் புலப்படும். இவையெல்லாம் பண்டைக்கால இயற்கை வழிபாட்டு முறையாகும்.

கூழ் படைத்தல்:

அடுத்துக் ‘கூழ் படைத்தல்’ என்பது குறிப்பிடத்தக்கது. கம்பு, கேழ்வரகு, சோளம் முதலிய கூலங்களை (தானியங்களை) மாவாக அரைத்து, நீர்விட்டுக் கரைத்துத் துழவிக் காய்ச்சிய உணவு கூழ்” எனப்படும். இதனைக் கரைத்துக் குடிப்பர். ‘கூழ் உண்ணுதல்’ என்று சொல்வது மரபு அன்று; கூழ் குடித்தல்’ என்று கூறுவதே மரபு பண்டைக் காலத்தில், சோறு உண்ணாமல், கூழ்