பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150


தைச் (சமாதியைச்) சுற்றி எழுந்தவையே! பழநி மலைக் கோயிலில் போகர் என்னும் சித்தர் அடக்கம். திருவாவடுதுறைக் கோயில் பகுதியில் திருமூலர் என்னும் தவயோகி அடக்கம். மயிலம் மலைக் கோயிலில் பாலய சித்தர் அடக்கம். நாட்டரசன் கோட்டை என்னும் ஊரில் கம்பர் என்னும் பெரும் புலவரின் அடக்கத்தின் மேல் சிவலிங்கச் சிலை வைத்துக் கோயிலும் எழுப்பியுள்ளனர். இப்படியே இன்னும் பல சொல்லிக் கொண்டு போகலாம். இந்து மதத்தினர் என்றென்ன மற்ற மதத்தினரும் பெரியார்களின் அடக்கத்தை மதித்துப் போற்றுகின்றனர். மனிதர்க்குள் முதன்மையான நேர்மையாளன் எவனோ - அவனே கடவுள் - அவன் தான் எங்கள் அருகக் கடவுள்’ - என்பது ஒரு சார் சைன சமயக் கொள்கையாகும். எனவே, மனிதரும் தெய்வமாகலாம் என இழுபறியாகச் சொல்ல வேண்டியதில்லை; மனிதரே தெய்வம் என அழுத்தம் திருத்தமாக அடித்துச் சொல்லலாம்.


இப்போது உலகினர் வழிபடும் கடவுளர் பட்டாளத்துள் பெரும்பாலான கடவுளர்கள் பெற்றோர்க்குப் பிள்ளையாயிருந்து வளர்ந்து வாழ்ந்தவர்களே. புத்தர் பிறந்தவர்; ஏசுநாதர் பிறந்தவர்; இராமர் பிறந்தவர்; கண்ணபிரான் பிறந்தவர். முருகனும் மூத்தபிள்ளையாரும் (விநாயகரும்) சிவன்-சிவை (பார்வதி) ஆகியோரின் பிள்ளைகளாம். இந்து மதத்தினர் சிறப்பாக வழிபடும் மூன்று தெய்வங்களுள் (மும்மூர்த்திகளுள்) நான்முகன் (பிரமன்) திருமாலின் (விஷ்ணுவின்) பிள்ளையாம். திருமாலோ பத்துப் பிறவிகள் (அவதாரங்கள்) எடுத்தவர் எத்தனையோ பெற்றோர்ர்குப் பிள்ளையாகப் பிறந்தவர் எனப் புராணங்கள் புகலுகின்றன. நான்முகனும் திருமாலுமே பிள்ளைகளாய்ப் பிறந்தவர்கள். எனில், நான்முகன் மனைவி கலைமகளைப் பற்றியும் திருமாலின் மனைவி