பக்கம்:பதினாறும் பெறுக.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

37

37

காட்சி 15

இடம்: தெரு.

காலம்: மாலை.

(கைப்பையில் ஏதோ சாமான்களோடு வருகிறான் முத்தன். பின்னால் வந்த பிரபு செல்வரங்கம், முத்தா முத்தா என்று கூப்பிடுகிறார்கள்).

முத்தன்: (நின்று திரும்பி) எனங்க. எசமான்? செல்ல . முத்தா! ஒன்னைத் தனியா சந்திச்சு பேசணும்னு ரொம்ப நானா நெனைச்சேன்; அது இன்னிக்குத்தான முடிஞ்சுது பாத்துக்க. முத்தன். நீங்க ரொம்பப் பெரியவங்க, இந்த ஏழை வேலைக்காரங்கிட்டே அப்படி என்னங்க பேசறதுக்கு இருக்கப் போவுது?

செல்வ: இருக்குதுடா முத்தா இருக்குது. நீ சாதாரண வேலைக்காரனல்ல; பரமசிவத்தோட குடும்பத்திலே ஒனக்கு இருக்கிற மதிப்பு எனக்கு நல்லாத் தெரியும்.

முத்தன் : அப்படிங்களா? சந்தோஷமுங்க அதுலே கொறைவு இல்லாமெ இருந்தாப் போதுமுங்க.

(மடியிலிருந்து ஒரு மடித்த கவரை எடுத்து முத்தனிடம் கொடுக்கிறார்)

செல்வ: கொறைவு இல்லே. இதை வச்சுக்கோ. என் மகளோட கல்யாணத்தை எப்படியும் நீதான் முடிச்சு வைச்சாகணும்.

முத்தன்: (வாங்கிக்கொண்டு) என்னங்க இது கவர்லே?

செல்வ: ஐநூறு ரூபா, போதுமா? இன்னும் வேணுமா?

முத்தன்: ஆமாங்க எசமான் கல்யாணத்துக்கு ஏன் இப்படி அவசரப்படுறீங்க?

செல்வ: முத்தா! என்னோட குடும்பம் பெரிசு. பிக்கல் பிடுங்கல் ரொம்ப அதிகம். தாங்க முடியலேடா. -

முத்தன்: ஒங்களுக்கு எத்தனை புள்ளைங்க எசமான்?

செல்வ: ஆண் அஞ்சு, பெண் எட்டு, ஒம்பது உருப்படிக்குக் கல்யாணம் எப்படியோ முடிச்சுபோட்டேன்.

முத்தன்: நீங்க நெசம்மாவே பெரியவங்கதான் எசமான்.

செல்வ: எப்படியிருந்தாலும் தன்னோட மகளை ஒரு நல்ல குடும்பத்திலே வாழ வைக்கணும்னுதானே பெத்தவங்க நெனைக்கணும்?

முத்தன்: ஆமா. எங்க எசமான் குடும்பத்தைவிட நல்ல குடும்பமே கெடைக்கலீங்களா ஒங்களுக்கு?

செல்வ: இதுபோல எல்லா அம்சமும் பொருந்தின குடும்பம் கெடைக்கல, முத்தா ! பரமசிவம் குடும்பத்துக்கு நிலபுலம் இருக்குது. சொத்துபத்தும் குறைவில்லே, ஒருத்தனுக்கு ஒரே மகன் அதிலும் பி. ஏ. படிக்கிறவன் இளங்கோ. அண்ணன் தம்பி, அக்கா, தங்கை யாருமில்லாத சின்ன குடும்பம் எம்மகள் ஒரு தொல்லையில்லாமெ நிம்மதியா சொகப்படுவா); சொத்துக்களும் பங்கு பாகம்னு பிரி யாது. நல்லாப் பொழைக்கலாம் பாரு. அதுக்குத்தான் நான் அவசரப்படறேன். வேறு எதுக்கு?

முத்தன்: நீங்க இப்படிப் பேசறது. நியாயமில்லே எசமான்.

387-5-7