பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

163

சேர்த்திதான். பச்சைக் குத்து பளிச்சென்று தெரிகிறது."எங்கே கையில் பச்சை குத்திருக்கே. உம் பேரா...?”

இவள் வலிய அவள் வலது கையைப் பற்றி நிமிர்த்திப் பார்க்கிறாள். எல்.வி என்று ஆங்கிலத்தில் ஒரு பூமாலைக்குள் எழுதப்பட்டிருக்கிறது. லட்சுமி இவள் பெயர். வி. யார் பெயர்? அவள் கேட்கவில்லை. காலஞ்சென்ற புருசனின் பெயராக இருக்கும். அவள் சடக்கென்று கையைத் திருப்பிப் போட்டுக் கொள்கிறாள்.

“நீங்க கல்யாணமானா பச்சை குத்திப்பிங்களா?”

“இல்ல... அவுங்க கட்சித் தலவர் பேரக் குத்திட்டாங்க. என்னையும் மகளிரணி, குத்திக்கன்னாங்க... நா மாட்டேன்னே. பிறகு அவுங்க பேரு வேலு. அத்தச் சேத்துக் குத்தினாங்க. அதா...”

குரலில் சோகம் இழையோடுகிறது.

"பாவம் லச்சுமி. நாந் தெரியாம கேட்டுட்டே. வருத்தப்படாதே... தப்பா நினைச்சிக்காத” என்று சமாளிக்கிறாள். என்றாலும் இது நாகரீகமான நடப்பு அல்ல என்று உறுத்துகிறது.

இப்போது கன்னியப்பனைக் கட்டினால் இந்தப் பச்சைக் குத்து உறுத்தும். பச்சைக் குத்து ஒன்றுதானா? ஒரு பிள்ளையே இருக்கிறது.

ஆண் ஒரு பெண்ணைக் கட்டியபின் இன்னொருத்தியைக் கட்டாமலே தொடர்பு கொள்கிறான். அவனுக்கு வரைமுறையே இல்லை. மனைவி இறந்து குழந்தைகளை மாற்றாந்தாய்க்குக் காட்டக் கூடாது என்று அவள் பாட்டன் திருமணமும் இல்லாமல் வேறு அப்பழுக்கும் ஒட்டாமல் இருந்தாராம். ஆனால் தன் மகளுக்கு அதனால்தானோ, நியாயம் செய்யவில்லை?

ஆண் தான் ஒரு பெண் ஒழுக்கமுடனோ, ஒழுக்கமில்லாமலோ இருப்பதற்குக் காரணம். சின்னஞ்சிறு வயசு. இவள் காலமெல்லாம் ஒழுக்கச்சுமையைச் சுமந்து கொண்டு மோசமான உலகில் எப்படி வாழ்வாள்? அவளுக்கும் நல்ல