பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுவே நம் மனம் அமைதியும் மகிழ்ச்சியும் பெறத்தக்க ஒரே வழியாகும்.

சீதா, ராகவன், சூர்யா ஆகிய மூவர்களுக்கும் மேற்சொன்ன தத்துவம் விளக்கமாக அமைகிறது!

விட்டகுறை - தொட்டகுறை

ன்னிரண்டு ஆண்டுகட்கு முந்தி ‘கல்கி’ அவர்களை நான் ‘பேட்டி’ கண்டபோது, அவரைச் ‘சகலகலா வல்லவர்’ என்று சுட்டியிருந்தேன்.

அவர் தொடாத பாத்திரம் இல்லை.

அவரது பாத்திரங்கள் தொடாத உள்ளம் இல்லை.

மகேந்திரர், மாமல்லர், சிவகாமி, பரஞ்சோதி, புலிகேசி, அருள்மொழி, நாகநந்தி, பார்த்திபன், விக்கிரமன் என்று வரலாற்றைப் பேசவைத்து, வரலாற்று உறுப்பினர்கட்குக் கலைநயம் நல்கி, காவியமேன்மை கொடுத்து, தமிழ் இலக்கியப் புகழ்ச் செல்வர்களாக ஆக்கிய பெருமையைப் புகழ்வதா?

திருடன் முத்தையனையும் கல்யாணியையும் புதிய கோணத்தில் பார்த்துச் சொல்லி நம்மையெல்லாம் விம்மி வெடிக்கச் செய்த விந்தையினைப் போற்றுவதா?

‘விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு - முன்பு
விட்டகுறை வந்து தொட்டாச்சு!’

இந்த ஒரு தத்துவமே ‘அலைஓசையின்’ உட்குரலாக அமைந்து பட்டாபி— லலிதா, மெளல்விசாகிப், கங்காபாய், ரமாமணிபாய், ரஸியாபேகம், அமரநாத், கிட்டா

40