பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மட்டும் பிடித்திருந்தது. இந்நிலையிலே, “அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இவ்வாழ்க்கையாகும்; அதுவும், மற்றவர் பழிப்பதற்கு இடமின்றி அமைந்து விடுமாயின் அதைவிட வேறு என்ன சிறப்பு வேண்டும்” என்னும் வள்ளுவனின் அறிவுணர்வில் அவனுக்கு ஏது நாட்டம்?

ஏரியில் விழுந்து விடுகிறாள் சீதா. பழைய அலை ஒசைச் சுழிப்புக்குரல்!

உயிரில் உயிராகவும், உயிரின் உயிராகவும் ஒன்றியதாக ‘தீவலம்’ சான்று மொழிந்ததன் பேரில் அவனது உடைமை ஆகிவிட்டவள் ஏரியில் விழுந்ததும், அவன் அவளைக் காப்பாற்றக் கவலைப்பட்டானா? இல்லை, இல்லவே இல்லை! அந்தக்கவலை தாரிணிக்கு உண்டாகிறது. இதன்பயனாக, தாரிணியைப்பற்றி முரண்பாடாகக் கொண்டிருந்த சீதாவின் கவலையும் கழிகிறது. இது ரத்தபாசத் தொடர்பின் விடிவு!

ஆம்; தாரிணியும் சீதாவும் உடன்பிறப்பு!

இவ்வுண்மை தெளிவு கொள்வதற்கு முன்னும் பின்னும் தொடர்ந்த மனச் சங்கடங்கள் பலப்பல!

பெண்ணென்று பூமியில் பிறந்துவிட்டால் மிகப் பீழை இருக்கிறதென்னும் கவிமணியின் வாக்கு முற்றிலும் உண்மையே!

தாரிணியை ‘அக்கா’ என்று நேர்மையான பாசத்துடன் அழைத்து, அவளையே முழுதும் நம்பியிருப்பதாக நாணயமான நம்பிக்கையை அவள்பால் வைக்கிறாள் சீதா.

இந்த நம்பிக்கையும் பாசமும் சீதாவை முழுப்பண்பு மிக்க கதைத்தலைவியாக ஆக்குகின்றன!

32