பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொய்மை கொண்ட கலி!

‘என் அகக் கண்ணில் நளினி புதுமைப் பெண் அல்ல; என்றும் இருந்து வந்திருக்கின்ற இந்தியப் பெண் மணிதான்’ என்று சொல்லுகிறார் நாவலாசிரியர். புதுமைப் பெண் என்றாலே அவளும் இந்தியப் பெண்மணிதான்; ஆனால் இவரோ புதுமைப் பெண்ணை ஏனோ துண்டுபடுத்திக் காட்டுகிறார். ‘பொய்மை கொண்ட கலிக்கு’ ஒரு விடிபொழுதெனச், சொற்களும் செய்கைகளும் ஏந்தி நிற்பவள் புதுமைப்பெண் தான்!


இப்ஸன் வழி

தேம்ஸ், மிஸிஸிப்பி, நைல் போன்ற மேலைநாட்டு ஆறுகள் பாவம் செய்தவை; அதனால்தான், திரு க.நா.சு. அவர்கள் அங்கே பிறப்பெடுக்கவில்லை. தமிழ் நாட்டில் - அவதரித்தார். விட்டகுறை தொட்டகுறையின் விளைவாக ‘மேலைநாட்டு இலக்கியத்தில்’ கரை காணத்துடிக்கிறார். மதிப்புப் பெறவேண்டும். ஆனால், இப்ஸன் (Henry Ibsen) தம் நாடகம் ஒன்றில் கதவடைப்பைச் சித்திரிக்கின்றார். அதில் உயிர் இருக்கிறது. இங்கே இவர் காட்டும் ‘அடைத்த கதவு’க்குப் பின்னேதான் கதையின் முடிவே ஒளிந்து கொண்டிருக்கிறதாம், சொல்லுகிறார்! இவர் எழுதிய ‘வரவேற்பு’ என்னும் சிறு கதையிலும் கதவடைப்பு நிகழ்ச்சி வருகிறது. அது அற்புதம்!

இன்னொன்று கதவை ஓங்கிச் சாத்திவிடும் உரிமை பெண்ணுக்குக் கிடைத்திருப்பதைப் பெருமையாகப் பேசுகின்ற க. நா. சு. அவர்கள், அந்தப் பெருமையை உரிய

96