பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்று அடிக்கடி தாரிணி சொல்வாளாம்! இப்போது, பூகம்பப்பணி இயற்றிய காலை தாரிணி பூமிக்கடியில் மாண்டுவிட்டதாக ராகவனுக்கு வந்த கடிதம் அவனது அனுதாபத்தையும் அமைதியையும் பெற்றுக்கொண்டது!

“எவ்வளவுதான் தங்களை நான் மறக்க முயன்றாலும், அது கைகூடவில்லை!” என்று தாரிணி மனம் திறந்து எழுதியிருந்ததைக் கண்டதும் நெகிழ்ந்த ‘கனி மனம்’, மேற்படி கடிதத்தின் இறுதிப் பகுதியைப் படித்ததும், கல்லாயிற்று.

அரசாங்க அலுவல், பெரிய சம்பளம், செளக்கியமான பங்களா, மோட்டார், டீபார்ட்டி ஆகிய இவற்றில் இன்பம் காண்பவன் அவன். இப்படிப்பட்ட கெளரவத்தை நாடும் அவன், தன்னைப்போன்ற ஒரு புத்திசாலி இந்தியா நாட்டில் இதுவரை பிறந்ததில்லை என்று பிரமாதமாக ‘மனப்பால்’ குடித்துவந்தான். அவன் வாழ்ந்த மண் அடிமைத்தளை பூண்டிருந்த லட்சணத்தில், எவ்வளவு லட்சணமான போக்குடன் ‘வெள்ளையர் தாசனாக’ அவன் உதவி வந்தான், தெரியுமா? என்ன பேச்சு, என்ன செருக்கு...

மானுடப் பிறப்புக்கே உரிய பலமும் பலவீனமுமாக அவன் உருக்காட்டினன்!

தில்லி வெளியினில்:

‘தில்லி வெளியினில் கலந்து கொண்டவர் திரும்பியும் வருவாரோ?’ என்று கவிஞர் கேட்ட வினாவை ராகவன் அறிந்திருக்க நியாயமில்லைதான். ஒருவேளை, சீதா அறிக்

25


அ—2