பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 67 அண்டம் என்பதற்கு விதை என்ற பொருள் உண்டு. விதையைத் தனித்திருக்கும் அண்டகோசத்தில் உடையது என்னும் பொருளில் இப்பெயர் இடப்பட்டிருக்கலாமோ என்னவோ தெரியவில்லை. அண்டகமேனி என்னும் பெயர் சா.சி.பி. அகரமுதலியில் தரப்பட்டுள்ளது. 2-16 சுரூபனாதி: சுருபனாதி என்பதற்கு, அழகான சுரூபம் - வடிவம் உடையது எனப் பொருள் செய்யலாம். மேனி, திருமேனி, திருமேனி அழகி என்னும் பெயர்கள் இந்தப் பொருள் உடையன வன்றோ? இவையெல்லாம் வடிவால் வந்த பெயர்களாகும். 2-17, 18,19, 20 பெண் தெய்வப் பெயர்கள்: இந்திரை மேனி என்னும் பெயர் சி.வை. அகராதியிலும், பயிரவி - மாயக் கன்னி - மேனகைவாரி என்பன சா.சி.பி. அகரமுதலியிலும் கூறப்பட்டுள்ளன. இவை பெண் தெய்வம் தொடர்பான பெயர்கள். குப்பை மேனி என்னும் பெயரில் உள்ள மேனி என்பதை அடிப்படையாகக் கொண்டு இப் பெயர்கள் இடப்பட்டிருக்கலாம். இந்திரை = இலக்குமி, பயிரவி = துர்க்கை, மாயக் கன்னி = கன்னிமார் எழுவருள் ஒருத்தி. மேனகை = ஆடல் பாடல் வல்ல அழகிய தேவமகளிர் நால்வருள் ஒருத்தி. செடியின் மேனியழகால் இப்பெயர்கள் வைக்கப் பட்டிருக்க வேண்டும். அங்ஙனமெனில், இவை வடிவால் வந்த பெயர்களாம்.