பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர, சண்முகனார் 127 ஆ) அருணாசல புராணம் 'விஞ்சிய அடைக்காய் உண்டி வழியிடை வெறுப்ப தாக்கி" (திருமலை - 26) இ) தாயுமானவர் பாடல் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும்' (சச்சிதானந்த சிவம்-11) இப் பகுதிகளால், வெற்றிலைக்கு வெள்ளிலை என்னும் பெயரும், பாக்குக்கு அடைக்காய் என்னும் பெயரும் உள்ளமை புலனாகும். பாக்குக் காய்க்கு அடைக்காய் என்னும் பெயர் வந்ததன் காரணம், அடையுடன் - வெற்றிலையுடன் போடப்படும் காய் பாக்குக் காய் என்பதே யாகும்.

  • 5,5 aleboacir

வெற்றிலையில் பல வகை உண்டு. அவற்றுள் வெள்ளை வெற்றிலை ஒன்றாகும். வெள்ளை வெற்றிலை வெளிறிய பசு நிறமாகவும் மென்மையாகவும் அழகாகவும் சுவைப்பதற்கு இன்பமாகவும் இருக்கும். கரும் பச்சையாகவும் சிறிது முரடாகவும் காரமாகவும் இருக்கும் வெற்றிலை உலக வழக்கில் பச்சை வெற்றிலை எனப்படுகிறது. சிலர் வெள்ளை வெற்றிலையையே விரும்புவர். புகையிலை போடுவோரும் ஏழை மக்களும் பெரும்பாலும் பச்சை வெற்றிலையே உட்கொள்வர். பச்சை வெற்றிலையினும் வெள்ளை வெற்றிலை விலை கூடுதல் என்பதும் இதற்குக் காரணமாகும். சி.வை. அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளிலை என்பது வெள்ளை வெற்றிலையைக் குறிக்கும்.