பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 மா தவம் புரிவாள் னாகச் செய்யும் கொழுந்து இலை என்றும் பொருள் பண்ணலாம். விண்ணுக்குள் மூர்த்தி விண்ணிலே இருக்கும் விண்மீண்களையும் காணச் செய்யும் ஆற்றல் உடைமையால் விண்ணுக்குள் மூர்த்தி' என்னும் பெயர் இதற்கு ஏற்பட்டிருக்கலாம். உம்பர் ஊர் உம்பர் ஊர் என்றால் தேவ உலகம் என்று பொருளாம். இப்பெயரும் விண்ணுக்குள் மூர்த்தி' என்பது போன்றதே. தேவ உலகம் வரையுங்கூடப் பார்க்கக்கூடிய ஆற்றலை அளிப்பதால், பொன்னாங்கண்ணிக்கு இப்பெயர் தரப் பட்டது. மை சாட்சி மை என்பதற்கு விண் என்னும் பொருள் அரும் பொருள் விளக்க நிகண்டில் கூறப்பட்டுள்ளது. சாட்சி என்பதற்கு, நேரில் பார்த்தறிந்தவர் (Eye-Witness) என்னும் பொருள் உண்டு. விண்ணையும்-விண்ணில் உள்ளவற்றையும் பார்த்தறியும் ஆற்றலைத் தருவதால், பொன்னாங் கண்ணிக்கு மைசாட்சி' என்னும் பெயர் தரப் பட்டிருக்கலாம். அன்றோ! பித்த சாந்தி - அதிமூத்திரம் சீக்கி பித்தத்தைச் சமன் செய்வதால், பித்த சாந்தி என்ற பெயரும் உண்டு. சிவப்புப் பொன்னாங் கன்னியை உண்டால், அடிக்கடிச் சிறு நீர் கழிப்பதுமிகுதியாகச் சிறு நீர் கழிப்பது ஒழுங்கு பெறுமாதலின் அதி மூத்திரம் நீக்கி' என்ற பெயரும் உண்டு.