பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


தேழு வயதிலேயே முடிந்துவிடுவார் எனத் தலையில் எழுதியிருந்ததால் இவ்வாறு மடிந்து போனார் எனப் பொதுமக்கள் எளிதில் ஊழ்வினையின் மேல் பழி போட்டுப் பேசுவர். இவ்வாறு கூறுவது அறியாமையாகும்.


இவ்வாறு பல எடுத்துக்காட்டுகள் கூறிக்கொண்டே போகலாம். ஒருவருக்குக் குலுக்குச் சீட்டுப் பரிசுத் திட்டத்தின் (Lottery) வாயிலாகப் பத்து நூறாயிரம் ரூபாய் பரிசு கிடைத்தது என்றால், அது தற்செயலான வாய்ப்பேயாகும். சூதாட்டத்தில் ஒருவருக்குத் தாயம் விழுகிறது - இன்னொருவருக்கு விழவேயில்லை; ஒருவருக்கு நல்ல சீட்டுகளே விழுகின்றன - இன்னொருவர்க்குக் கெட்ட சீட்டுகளே விழுகின்றன. குதிரைப் பந்தயத்தில் ஒருவர் வெல்கிறார் - இன்னொருவர் தோற்கிறார். இவற்றையெல்லாம். ஏதோ ஊழ்வினை என ஒன்று காரணமாக இருந்துகொண்டு நடத்துகிறது என்று கூறுவது அறியாமை. இவையெல்லாம் எதிர்பாராத தற்செயலான நிகழ்ச்சிகளே.


வாழ்க்கையில் நேரும் எல்லா வகையான நிகழ்ச்சிகளுமே இத்தகையனவே. ஒருவர் வாணிகம் தொடங்குகிறார் என வைத்துக் கொள்வோம். அவர் கடை உள்ள இடத்தின் தேர்ந்தெடுப்பு, கடை தொடங்கிய விழாக்காலம், அதனால் பெற்ற விளம்பரம், மக்களுக்கு இன்றியமையாத் தேவையான விற்பனைப்பொருள், அதன் தரம், விலையளவு, நாளடைவில் பெற்றுவிட்ட நல்ல பெயர் - முதலிய சூழ்நிலை ஆற்றல்கள் எல்லாம் சேர்ந்து அவரை மாபெருஞ் செல்வராக்கி விடுகின்றன, இன்னொருவர் இத்தகைய நல்ல சூழ்நிலை வாய்க்கப் பெறாமையால் வணிகம் தொடங்கியும் முன்னேற முடியவில்லை. நல்ல சூழ்நிலை வாய்ப்பினால் பெருஞ்