பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146


லாம் சொல்லிக் கொண்டிருந்தாராம், நடமாடிய மனிதர்கள் அவருக்கு மனிதர்களாகத் தெரியவில்லை. அங்கே நடமாடியவர்கள், இது ஏதோ ஒரு பைத்தியம்உளறுகிறது-என்று சொல்லிக் கொண்டு போய்விட்டார்களாம். இந்தக் காலத்தில் அவ்வாறு கூறினால், துறவிக்கு அடி உதை கிடைக்கும்.


மூன்று: சைவ சமயச் சந்தான குரவர்கள் நால்வர் என்று கூறப்படுகின்றனர். மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார்-என்பவர்கள் அந்த நால்வராவர்.


இவர்களுள் உமாபதி சிவாச்சாரியார், தில்லை நடராசர் கோயில் பூசனை (பூஜை) புரியும் மரபினர். இவரை உமாபதி சிவம் என்றுதான் சொல்லவேண்டும். சிவாச்சாரியார் என்று சொல்வது தவறு என்று சிலர் சொல்கின்றனர். இதுதான் தவறு. சிவன் கோயில் பூசனை செய்பவர்களைச் சிவாச்சாரியார் என்று சொல்வது சைவ சித்தாந்த மரபு. இந்தச் சிவாச்சாரியார் ஒருநாள் தில்லைத் தெருவழியே பல்லக்கில் அமர்ந்து சென்று கொண்டிருந்தாராம். அவருக்கு முன்னால், சிறப்பு மரபின்படிச் சிலர் தீவட்டி, கொடி முதலியன ஏந்திச் சென்றனராம். தெரு ஓரத்தில் நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த மறைஞான சம்பந்தர் என்னும் அருளாளர், பட்ட கட்டையிலே பகல் குருடு ஏகுது காண்’ என்றாராம். பட்ட கட்டை என்பது பல்லக்கைக் குறிக்கிறது. பகுல் குருடு என்பது, பகலில் பிடித்துக் கொண்டு செல்லும் தீவட்டியைச் சாடுகிறது. இதைக் கேட்ட உமாபதி சிவாச்சாரியார் மெய்யறிவு பிறந்தவராய்ப் பல்லக்கிலிருந்து இறங்கி, மறைஞான சம்பந்தரின் திருவடிகளில் விழுந்து வணங்கி அவருக்கு மாணக்கராக (சீடராக) மாறினாராம்.