பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110


தொட்ட மரபு. வெள்ளிக்கிழமை தோறும் பசுவைக் குளிப்பாட்டி மஞ்சள் பூசிக் குங்குமப் பொட்டு இட்டுக் கர்ப்பூரம் கொளுத்தி வழிபடுவது வழக்கம். புது வீடு புகும்போது பசுவைப் பயன்படுத்துகின்றனர்; அவ்வாறே: மோட்ச வீடு புகுவதாக எண்ணிச் செய்யும் இறுதிச் சடங்காகிய கரும காரியத்தின் போதும் பசு பயன்படுத் கப்படுகிறது. நாடோறும் பசுக்களைத் தொட்டுக் கும்பிடுவது பலரது பழக்கம். தமிழ்நாட்டில் தைத் திங்கள் இரண்டாம் நாளை சனவரி 15ஆம் நாளை) மாட்டுப் பொங்கல் விழா நாளாகக் கொண்டு, மாடுகளைக் குளிப்பாட்டிப் பலவகையான ஒப்பனைகள் செய்து படையில் போட்டு வழிபடுவது தொன்று தொட்ட வழக்கம். பசுவதை கூடாது என இந்தியாவில் பலர் போராடுகின்றனர். பசு தெய்வமான வரலாறு இது.

பாம்பு வழிபாடு:

நன்மை தரும் மாட்டுக்கு நன்றி கூறும் வகையில் வழிபாடு நடக்கிறது. அவ்வாறே, தீமை செயயக்கூடிய பாம்புக்கும் வழிபாடு நடைபெறுகிறது. தீமை செய்யா திருக்க வேண்டும் - கடித்து இறப்பு நேராதிருக்கச் செய்யவேண்டும் என்று நயந்து கெஞ்சி வேண்டிக் கொள்ளும் முறையில் பாம்புக்கு அவ்வழிபாடு நடத்தப் பெறுகிறது.

பாம்புப் புற்றில் பால் வார்ப்பதும், புற்றெதிரில் படையல் போடுவதும், அங்கே பால், முட்டை போன்ற பொருள்களை வைத்து விட்டு வருவதும் இந்திய நாட்டுப் பழக்கம். வீடுகளில் நல்ல பாம்பைக் கண்டாலும், அதனை அடிக்காமல், கர்ப்பூரம் கொளுத்திக் காட்டிப் படைத்து, பகவானே, எங்களை ஒன்றும் செய்யாமல் இவ்விடத்தினின்றும் அகன்று மறைவாயாக’ என்று வேண்டிக் கொள்வது மக்கள் மரபு.