பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

தேவாரம் 35 டவனை-மாணிக்கம் போன்றவனை - வானில் இருந்து வந்த கங்கையைச் சடையில் வைத்தவனை -என் தலைவனை- எனக்கு அயல் ஆகாதவனை - இரும்பு உண்ட நீர்போல என் மனத்து உள்ளே கலந்து நிற்பவனை - எட்டு வடிவமாகி நின்ற ஒருவனை- என் தலைவனை - காதில் வெண்குழை அணிந்தவனை - கடலில் மிதந்த கழுமலம் என்னும் வளம் பொருந்திய நகரில் கண்டு கொண்டேன். சாதல்-death தவிர்த்து - forbid; dispe1 அருள்-grace வகுத்து-created பிறத்தல் - birth தலைவன் - Lord மலையின் மாது - மலைமகள் -உமை-Daughter of Himavan - Uma ஓர்பால் - in one part (of the body) புனல் - வெள்ளம் - கங்கை-food-Ganges சடை-matted locks ஏதில்- not an alien இரும்பு- (not hot) iron மணி-jewel எம்மான்- My Lord மனம் -mind நீர்- water எண்வகை-எட்டுவடிவு--நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர். Eight forms-Earth, Water, Fire, Wind, Sky, Sun, Moon and Soul. ஒருவன் - Primal One காது--ear கடல் - sea எங்கள் பிரான் -- our master வெண் குழை -white ear rings, மிதந்த - floated கழுமலம் - சீர்காழி - Kazhumalam is one of the names of வளநகர்- fertile city Seerkazhi He is the Lord who dispelled death and birth; He caused me to be born and bestowed grace; He holds Uma in one part of His body; He is gem-like; He is my Lord who holds the Ganges in His matted locks; He is not an alien; He is in my mind as the water absorbed by red hot iron; He is in eight forms; He is the Primal one; He is my Lord; He wears the white conch as ear rings; Him I found at the city called Kazhumalam which floated on the sea (at the final deluge).