பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

157

“நா அப்பாகிட்டச் சொல்லுற வாங்கிக் குடுப்பாங்க. கண்ணு... அவங்ககிட்டப் புதுசாப் போற. எப்பவோ பத்து வருசம் முன்ன கலியானத்துக்குப் போனது...”

“அதெல்லாம் எனக்கு நீ சொல்லித் தர வேண்டாம். நீ நினைக்கிறாப்பல மாமா ஒண்ணும் இல்ல. அவுரு என்ன பி.இ. படிக்க வச்சிப்பாரு...”

“வச்சிக்கட்டும். எனக்குச்சந்தோசம்தா...” அவளாகவே பூவை வைத்துக் கொள்கிறாள்.

இவர்கள் வீட்டை விட்டுப் போன பின் வாசல் தெளிக்கக் கூடாது என்று நினைவு வருகிறது. சரசரவென்று சாணம் கரைத்து வாசல் தெளித்துப் பெருக்குகிறாள்.

“தெரிஞ்சிருந்தால் பால் கொஞ்சம் வச்சி காபி போட்டுக் குடுத்திருப்பே... இப்ப மாடு கறக்குமா...?”

“நேரமாச்சி. கெளம்பு. ஆறு மணிக்குப் பஸ் போயிடும். எட்டரைக்குள்ள நாம போயிடணும்... கிளம்பு...”

அப்பாவும் அம்மாவும் எழுந்து உட்காருகிறார்கள்.

வாசல் வரை வந்து அவர்கள் சைக்கிளில் ஏறிச் செல்வதைப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.

அன்று பகல் நெல்வயலுக்கு இரண்டாம் மேலுரம் வைக்க வேண்டுமே பிசிறி வைத்திருக்கும் யூரியா வேப்பம் பிண்ணாக்கை வண்டியில் போட்டு அப்பன் ஓட்டி வருகிறார். வண்டி இவர்களுடையது அல்ல. இரவல்தான்.

"வெயில் கொளுத்துகிறது சித்திரைக்கு முன்ன இப்படி இருக்கு. இந்தப் பட்டத்தில, கொல்ல மேட்டுல நெல்லு வைப்போம்னு யாரு நினைச்சாங்க!”

“நாம நினைக்கிற தெல்லாம் நடக்கிறதில்ல. மேல ஒருத்தன் இருக்கிறான். அவன் நடத்துறான். உன் சின்னாத்தாவுக்கு இதில விளைஞ்ச மொதப் பயிரில், ஒரு படிக் குடுக்கணும். அவ. புள்ளக்கி ஒரு சீலயோ, பேத்திங்களுக்கு ஒரு கவுனோ வாங்கிக் கொண்டு குடுக்கணும்...”