பக்கம்:உத்தரகாண்டம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    295


“அந்தப் புண், கடசீ வரை ஆறல, எந்தப் பொம்புளயின்னாலும் அவளைத் தொட்டுக் குலைக்கிறது, கல்லு கட்டி சைகிள் செயின் சோடா பாட்டில் கத்திகுத்தெல்லாந்தான் நீங்க ஆரம்பிச்சிவச்ச கட்சிக் கலாசாரம். அதான் இன்னிக்கு இந்தச் சீரழிவுக்கு எல்லாரையும் கொண்டாந்திருக்கு. ஒரு கட்சிக்கும் ஒரு கொடிக்கும் இன்னைக்கு அந்த சத்தியம் இல்ல.”

இந்தச் சீலையே நெஞ்சை அறுக்குது.

இவளுடைய பொங்கெழுச்சி, புயல்போல் வந்த சீற்றம், அவளைக் கட்டிப் போட்டாற்போல் பிரமிக்க வைக்கிறது

அப்போது, எங்கிருந்தோ குரல்கள், ஐயோ, ஐயோ என்ற சோகக் குரல்கள் எதிரொலிக்கின்றன. சந்திரி சட்டென்று கதவைத் திறந்து கொண்டு விரைகிறாள்.

அவளுக்கும் புரியவில்லை. மெள்ளக் கதவைத் திறந்து கொண்டு ஒழுங்கையில் நிற்கிறாள்.

ஒரு பணியாளன் வருகிறான். கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுகுரலில், “அய்யா, தலைவர் அய்யா, மாரடைப்புல பூட்டாரு...” என்று செய்தி தெரிவிக்கிறான்.

அவள் புருசன் இறந்த போது, அவளைச் சுற்றி யாரும் அடித்துக் கொண்டு அழவில்லை. குருகுலமே உட்கார்ந்து, துதிப்பாடல்களைப் பாடியது. பெரிய பெரிய ஆட்களெல்லாம் வந்தார்கள். அவன் திருட்டுத்தனமாகக் குடித்தான். போலீசு பிடித்துவிடும். ஆனால் ஜாமீன் வழக்கு இல்லாமலே, தண்டனை கொடுத்து விடுவிப்பார்கள். கண்கொத்திப்பாம்பு போல் உன்னைக் கவனிக்க வேண்டியிருக்கப்பா, எங்கே கிடைக்குது, சொல்லு? என்பார் அய்யா. ஒருநாள் போதையில் வரும்போதுதான் விழுந்து கல்லில் அடிபட்டு மாண்டான். ஆனால் அவன் அப்போதைய இலட்சியப்பாதையில் ஒரு முள்ளாக நெருடினான் என்று வசை பாடவில்லை. மரியாதை செய்தார்கள். இந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/297&oldid=1050401" இலிருந்து மீள்விக்கப்பட்டது