பக்கம்:உத்தரகாண்டம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    329

திலேயே வந்தாச்சி. அப்ப ஏன் வறுமை தொலையல? இந்தக் கட்சிகளெல்லாம் ஏன் எல்லாப் பிரச்னைகளுக்கும், சரியா தீர்வு காணாமல், இருக்கு. மக்களெல்லாம் நாம சரியான ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருக்கிறோம்னு உணரல? ஏன் இவ்வளவு லஞ்சம்? சாராயம்... எங்க அமைப்பு, ஒரு கிராமத்துல சாராயமே இல்லாம மாத்தி முழு வெற்றி பெற்று இருக்கு. அது மாதிரி பெண்களுக்கு, விழிப்புணர்வு கொண்டு வந்து மாத்தற திட்டம். முதல்ல, வன்முறைய மாத்தணும்... இங்க தமிழ்நாட்டில் இருபத்தஞ்சு வருசம் போல மதுவிலக்கு நடைமுறையில் இருந்ததாம்...? தாத்தா சொல்றாரு...”

“ஆமாம்மா, இருந்திச்சி. எங்கோ சில மீறல்கள் இருந்தது. பள்ளிகள், கல்லூரிகள், ஆபீசுகள்னு, குடி ஒழிஞ்சிருந்தது. திருட்டை ஒழிக்க முடியல. அந்த புத்தி எப்பிடியோ வருது. அதுக்காக காவல் துறையே வேணாம்னு சொல்றாப்புல, மதுவிலக்க எடுத்தாங்க...”

“ஆமா, இப்ப அதைவிட்டுடுங்க. தாத்தா, ஊத்தங்கரைக் காரங்களும் அழகாபுரிக்காரங்களும், வெட்டிக்கிட்டாங்க. யாருக்கு நஷ்டம்? இதை உணரச் செய்யணும். இந்த ஊரு ஆளுக, அந்த ஊரு ஆளுகள சேத்து வச்சி... என்னென்ன குறைன்னு புரிஞ்சிட்டு, நல்ல குடியாட்சி மக்களாக உரிமையுடன் செயல் படச் செய்வோம்...”

“அப்ப நீங்கல்லாம் வெவ்வேறு இடத்திலேந்துதா வந்திருக்கீங்களா?”

“எல்லாரும், இந்த நாட்டுல பிறந்தவங்கதா பாட்டி. ஆனா, இந்த விக்ரம், தினு இரண்டு பேரும் அமெரிக்காவில் இருந்து வந்திருக்காங்க. அநேகமாக எல்லாரும் படிக்கனும், ஆராய்ச்சின்னு போனோம். ஆனா இப்ப, எங்க பிறந்த நாட்டுக்கு எதானும் பண்ணனும்னு வந்திருக்கிறோம், ஆயா...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/331&oldid=1050473" இலிருந்து மீள்விக்கப்பட்டது