பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

ஏற்று அரசாட்சியைத் திறமையாகப் பல்லவராயனே நடத்தி வந்தான்.

பாண்டிய நாட்டுப் போர்

இரண்டாம் இராசாதிராச சோழன் காலத்தில் பாண்டிய நாட்டில் மதுரையில் அரசாண்டவன் பராக்கிரம பாண்டியன் எனப் பெற்றான். அவனுக்கும் அவன் தாயத்தின்னான குலசேகர பாண்டியனுக்கும் போர் மூண்டது. குலசேகர பாண்டியன் மதுரை நகரை முற்றுகை யிட்டான். பராக்கிரம பாண்டியன் தனக்கு உதவுமாறு சிங்கள வேந்தனாகிய பராக்கிரம பாகுவை வேண்டினான். இலங்காபுரித் தண்ட நாயகன் தலைமையில் சிங்களப் படை ஒன்று வந்தது. அப்படை வருவதற்குள் பராக்கிரம பாண்டியனும் அவன் மக்களும் கொல்லப்பட்டனர். இதனை யறிந்த இலங்காபுரித் தண்ட நாயகன் குலசேகர பாண்டியனை எதிர்த்துக் கடும்போர் புரிந்து வெற்றி யெய்தினான் ; மதுரை நகரைக் கைப்பற்றினான் ; கொலை செய்யப்பட்ட பராக்கிரம பாண்டியன் மகனும் மலை நாட்டுக்கு ஓடி ஒளிந்தவனுமாகிய வீரபாண்டியனை வருவித்து அவற்கு மதுரையை அளித்தான் ; கீழை மங்கலம் மேலை மங்கலம் முதலாகிய ஊர்களைப் பிடித்துக் கண்டதேவமழவராயன் ஆண்டு வருமாறு செய்தான் ; தொண்டி, கருந்தங்குடி முதலான ஊர்களைக் கைப்பற்றி மாளவச் சக்கர வர்த்தி என்பானிடம் ஒப்படைத்தான்.

இங்ஙனம் இலங்காபுரித் தண்ட நாயகன் வெல்வதையறிந்த குலசேகரன் மீண்டும் வீரபாண்டினைத் தாக்கினான் ; வீரபாண்டியன் மதுரையை விட்டு ஓடினன். இதைக் கண்ட இலங்காபுரித் தண்ட நாயகன் படைத்-