பக்கம்:தமிழ் அங்காடி.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  281


பகுதி, தமிழர் பகுதி என இரண்டு உண்டு. கடற்கரை ஒரமாக வெள்ளையர் பகுதியும் அதன் மேற்கே தமிழர் பகுதியும் இருக்கும். இப்போதும் அதற்குரிய அடையாளங்கள் உண்டு. இரண்டு பகுதிகளையும் இடையே ஒரு வாய்க்கால் பிரிக்கின்றது. வெள்ளைக்காரர் போன பிறகும், அவர் இருந்த பகுதி தூய்மையாக இருக்கிறது. தமிழர் பகுதி அவ்வளவு தூய்மையுடன் இருப்பதாகச் சொல்ல முடியாது. "அண்மையிலிருந்து சேய்மைக்குச் செல்லுதல்", நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்துக்குச் செல்லுதல், எளிமையிலிருந்து அருமைக்குச் செல்லுதல், "தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல்” என்னும் உளவியல் (Psychology) முறைப்படி புதுச்சேரியிலிருந்து புகாருக்குச் செல்லலாம்.

புதுச்சேரியின் கடற்கரையில் வெள்ளையர் பகுதி இருப்பது போலவே, புகாரில் பன்னாட்டார் தங்கியிருந்த மருவூர்ப்பாக்கம் என்னும் பகுதி இருந்தது. அதன் மேற்கே பட்டினப்பாக்கம் இருந்தது. பாக்கம் என்பது ஊரைக் குறிக்கும் சொற்களில் ஒன்று. பட்டினம் என்பது நகரைக் குறிக்கும். பட்டினப்பாக்கம் என்பது, பட்டணமாக உள்ள பெரிய ஊர் என்பதைக் குறிக்கும்.

இனி மருவூர்ப் பாக்கம் என்பது பற்றிக் காணலாம். மருவு + ஊர் = மருவூர். மருவுதல் =. சேர்தல் - கலத்தல். ‘மருவுக மாசற்றார் கேண்மை’ என்னும் திருக்குறளிலும் (800) இந்தச் சொல் இந்தப் பொருளில் ஆளப்பட்டிருப்பதை அறியலாம். வெளிநாட்டினர் பலரும் வந்து மருவிய - சேர்ந்த - கலந்த ஊர்ப் பகுதி மருவூர்ப் பாக்கம் எனப் பட்டது. திருமணம் நிகழ்ந்ததும் மணமகன் மணமகள் வீட்டிற்கோ - மணமகள் மணமகன் வீட்டிற்கோ முதல்முதலாகச் சென்று கலந்து உண் ணு'தற்கு ‘மருவுண்ணுதல்’ என்னும் வழக்கு தென்னார்க்காடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/283&oldid=1204501" இலிருந்து மீள்விக்கப்பட்டது