பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. தொல்காப்பியம்-பொருளதிகாரம்

தன்னை யழிதலும் அவனு றஞ்சலும் இரவினும் பகலினும் நீவா என்றலும் கிழவோன் தன்னை வாரல் என்றலும் நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறலும் புரைபட வந்த அன்னவை பிறவும் வரைதல் வேட்கைப் பொருள என்ப.

இளம் பூரணம் :

என்-எனின். இது தோழி கூற்றிற் கூறப்பட்ட சில கிளவிக் குப் பயன் உணர்த்திற்று.

(இ-ள்.) தலைமகன் வருகின்ற பொழுதும் நெறியும் ஊரின்கட் காவலும் என்று சொல்லப்பட்டவற்றின் கண் வரும் தப்பினால் உளதாகுங் குற்றங் காட்டலும், தான் மனனழிந்து கூறலும், தலைமகட்கு வரும் இடையூறு கூறலும், இலைமகளைப் பகற்குறி விலக்கி இரவுக்குறி நீவா என்றலும், இரவுக்குறி விலக்கிப் பகற்குறி நீ வா என்றலும், தலைமகனை வாராதொழியெனக் கூறலும், நன்மையாகவுந் தீமையாகவும் பிறபொருளை எடுத்துக் கூறலும், இத் தன்மையவாகிக் குற்றம் பயப்ப வந்த அத்தன்மைய பிறவும் புணர்ச்சி விருப்பமின்மையாற் கூறப்பட்டனவல்ல ; வரை தல்வேண்டும் என்னும் பொருளையுடைய என்றவாறு,

இவையெல்லாந் தோழி கூற்றினுள் கூறப்பட்டன. ஆயின் சண்டோதிய தென்னை எனின், அவை வழுப்போலத் தோற்றும் என்பதனைக் கடைபிடித்து அன்பிற்கு மாறாகாது ஒருபயன் பட வந்த தெனஉணர்த்துதலே ஈண்டு ஒதப்பட்ட தென்ப. நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறலும் என்பது நாடும் ஊரும் இல்லுங் குடியும் என ஆண்டோதப்பட்டது. இவை வரைதல் வேட்கைப் பொருளவாமாறும் ஆண்டுக் காட்டப்பட்ட உதாரணத்தான் உணர்க. (கடு)

நச்சினார்க்கினியம் :

இதுவும் தோழிக்குந் தலைவிக்கும் உரியனவாகிய வழு வமைக்கின்றது.

1. "தலைமகற்குவருமிடையூறு கூறலும் தலைம்கனைப் பகற்குறிவிலக்கி இரவுக்குறி வோவென்றலும் என இவ்வுரைத் தொடரைத் திருத்திக்கொள்க.