பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

呜 தொல்காப்பியம். பொருளதிகாரம்

சூத்திர முதலியன உலகியல்வழக்கின் வழி இயவாறுங் கூறி, அவ் வழு அமைக்கின்றவாறு மேலே காண்க. புறத்திணையியலுட் புறத் திணை வழுக்கூறி அகப்பொருட்குரிய வழுவே ஈண்டுக் கூறுகின்ற தென்றுணர்க. '

இயலா’ என்றதனால் என் செய்வா மென்றவழிப் பொன் செய்வா மென்றாற்போல வினாவிற் பயவாது இறைபயந்தாம் போல நிற்பனவுங் கொள்க. இன்னும் அதனானே செய்யுளிடத் துச் சொற்பொருளானன்றித் தொடர்பொருளாற் பொருள் வேறு பட இசைத்தலுங் கொள்க. அது சூத்திரத்துஞ் செய்யுளுள்ளும் பொருள் கூறுமாற்றா னுணர்க. - «. (s)

ஆய்வுரை: களவும் கற்பும் என மேற்குறித்த அகத்திணை யொழுகலாற்றில் இடம் பெறுவதற்குரிய சொற்பொருளமைதியி, னையும் பொருளின் அமைதியினையும் உணர்த்துதலின் இது பொருளியல என்னும் பெயர்த்தாயிற்று. அகப்பொருள் புறப் பொருள் என்பன இரண்டுபொருண்மையினும் இதுவரை கூறப் வடாது எஞ்சிநின்றனவற்றைக் கூறுதலின் இதனை ஒழிபியல் எனினுங் குற்றமில்லை என்பர் இளம்பூரணர்,

சொல்லதிகாரத்திற் கூறிய சொற்களை மரபியலின் இரு திணையைம்பால் இயல்நெறிவழாமைத் திரிபில்சொல்ன்னித் தொல் காப்பியனார் கூரலின், அத்தகைய சொற்கள் புலனெறிவழக்க. மாகிய இவ்வகத்தினையொழுகலாற்றில் தம் பொருளை வேறு

1. புறத்தினையியலிலுள்ள வெறியறி சிறப்பின் (5) என்னும் முதற்குறிப்பு டைய சூத்திரம் புறத்திணைக்கெல்லாம் பொதுவாகிய வழுவேழும் உணர்த்திற் றென்பதும் அதுபோன்று அகப்பொருட்குரிய வழுவினை எடுத்துரைத்து அன்மதி: கூறும் முறையில் அமைந்தது பொருளியலாகிய இவ்வியலென்பதும் கச்சினார்க் கினியர் கருத்தாகும்.

2. வினாவிற் பயவாது என்பதனை வினாவிறைபயவாது எனத் திருத்திக் கொள்க. இறை-மறுமொழி. வினா இறை பயத்தலாவது, "சாத்தா உண்டியோ, என வினாவிய கிலையில் உண்ணேனோ எனவரும் அவன் கூற்று வினாவுக்கு வினாவாகக் காணப்பட்டாலும் உண்டேன்’ என்னும் மறுமொழிப் பயனைத் தருதல்.

3. சொற்பொருள் என்றது, தொடர் மொழியில் அமைந்த ஒரு சொல்லுக். குரிய பொருளை. தொடர்ப்பொருள் என்றது, தொடர் மொழி முழுவதற்கும் உரிய பொருளமைப்பினை.