பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போருளியல்-நூற்பா நடு 翻y感况

வீறுபெற்று மறந்த மன்னன் போல நன்றி மறந்தமையா யாயின் மென் சீர்க் கலிமயிற் கலாவத் தன்னவிவள் ஒலி மென் கூந்தல் உரியவாம் நினக்கே. ’’ (குறுந் 225) இதனுள் தான் கெட்டவிடத்து உதவின உதவியை அரச வுரிமையெய்திய மன்னன் மறந்தாற்போல நீ இரந்து துயருற்ற காலத்து யான் தலைவியை நின்னோடு கூட்டிய செய்ந்நன்றியை மறவாது இன்று நீ வரைந்துகொள்வையாயின் இவள் கூந்தல் நினக்குரிய’’ வென்றவழி உவமையும் பொருளும் ஒத்து முடிந்தமையின் முன்னின்ற நாடவென்பது உள்ளுறையுவம மன்றாய் இறைச்சியாம். என்னை? தன் கன்றிற்குப் பயன்பட் டுப் பிறர்க்கு உயிரைக்கொடுக்கின்ற தினையைத் தான் உண்டு அழிவுசெய்கின்றாற்போல, நீ நின் கருமஞ் சிதையாமற் பார்த்து எமக்குயிராகிய இவளைத் துயருறுத்தி எம்மை இறந்துபடுவித்தல் ஆகாதென்று உவமையெய்திற்றேனும். பின்னர் நின்ற பொரு ளோடியையாது இவ்வுவமம் உள்ளுறையுற்றுப் பொருள்பய வாது இறைச்சியாகிய நாடென்பதனுள்ளே வேறோர் பொருள் தோற்றுவித்து நின்றதேயாமாதலின் முலைமாந்த என்றது தன் சருமஞ் சிதையாமற் பார்த்தென்னுந் துணையன்றி உள்ளுறை யுவமப் பொருளை முற்ற உணர்த்தாமை யுணர்க."

வேங்கை தொலைத்த வெறிபொறி வாரணத்

தேந்து மருப்பின் இன வண் டிமிர் பூதுஞ் சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால் ஐவன வெண்ணெல் அறைபுரலுட் பெய்திருவாம்

ஐயனை யேத்துவாம் போல அணிபெற்ற மைபடு சென்னிப் பயமலை நாடனைத் தையலாய் பாடுவாம் நாம்.' (கலி. 43)

1. வரை விடைவைத்துப்பிரியும் தலைவனை நோக்கித் தோழி கூறுவதாக அமைந்தது 225-ஆம் குறுக்தொகைப் பாடல், இதன் கண் கன்றுதன் பயமுலை மாந்த முன்றில்தினை பிடியுண்ணும் பெருங்கல் காட' 'பெண்யானை தன் கன்று தன்முலையிற்பாலுண்ணத் தான் மனைமுற்றத்தில் உலர வைத்துள்ள தினையயுண்னும் காட்டினையுடையவனே எனத் தலைவனை முன்னிலைப்படுதவதாய் அவனது காட்டுக்கு அடைமொழியாய் வந்த கருப்பொருளாகும், இதன் கண் 'பெண்யானை தன் கன்றிற்குப் பயன்பட்டுப் பாலைச் சுரங் துகொண்டு பிறர்க்கு உயிரைக் கொடுக் கிற தினையைத் தான் உண்டு அழிவு செய்கின்றாற்போல தலைவனாகிய கீ, கினது கருமஞ்சிதையாமற் பார்த்துக்கொண்டு எமக்கு உயிர் போன்றவளாகிய தலைவியைத் துயருறுத்தி எம்மை இறந்துபடுமாறு செய்தல் ஆகாது' என