பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ητς!ώ தொல்காப்பியம் பொருளதிகாரம்

(இ-ள்) இமையோர் தோத்தும் எறி கடல் :சைப்பினும் தேவருலகத்தின் கண்ணுந் திரையெறியுங் கடல்சூழ்ந்த நிலத்தின் கண்ணும்; அவை இல் காலம் இன்மையான அறம் பொருளின் . பங்களின் நுகர்வு இல்லாததோர் காலம் இன்றாகையால் அவற்றைப் பொருளென்றே கொள்க (எ-து.)

தமிழ்நடக்கும் எல்லை கூறாது தேவருலகையும் மண்ணுல கையுங் கூறினமையின் இவை யாண்டும் ஒப்ப முடிந் தன வென. வும் அவை உள்ள அளவும் இவை நிகழ்வனவெனவுங் கூறலின் வழுவமைதியாயிற்று. இமையாக் கண்ணராகலின் இமையோர் என் றார். இடையூறில்லா இன்பச் சிறப்பான் இமையோரை முற். கூறினார்.' {திகர்

ஆய்வுரை :

இஃது ஒப்பு முதலாக நுகர்வு ஈராகச் சொல்லபபட்டன . வெல்லாம் எங்கும் என்றும் உள்ள பொருள்களே என ஏதுககாட்டி நிறுவுகின்றது,

(இ-ள்) இமைத்தல் இல்லாத கண் களையுடைய வானோர் உலகத்தும் வீசுகின்ற அலைகளையுடைய க. பாற் சூழப் பெற்ற நில எலலையிலும் ஒப்புமுதலாக மேற் கூறப்பட்ட பொருள்கள் இல்லாத காலம் என்றும் இல்லாமையால் அவையனைத்து ம உள் பொருள களே என த துணியப்படும் எ-று.

ஒப்பு. உருவு முதலாகக கூரப்பட்ட இப்பொருள்களை இல்லையென மறுப்போர் வானுலகினும் மண் ணுலகினும் யாண்டும் இல்லாமையால் இவை உள் பொருள்களே என்பதற்கு

LALLLAAAAA SLSLSLSH HCCTAAAS ALLLLS AAAAAAT

1. இமையார், இமையோர் என ஆ ஓ வாயிற்று. இடிையார்-கண் இமைத்தல் இல்லா தார் என்ற து இமையாக் கண்களையுடையராய தேவர்களை இமையோர் தேனம்-விண்ணுலகம், எறிகடல்வம்ைபு-அலைகள் வீசும் கடலினை எல்லையாக அடையது என்றது மண்ணுலகத்தினை. இவ்வுலகில் விண்ணும் மண்ணும் அழிவின்றியுள்ள காலமளவும் இப்பொருள்கள் உயிர்களின் மனத்தகத்தே கிலை பெற்றுள்ளமையின் இவை கட்புலப்படா வாயினும் இவை யில்லாத காலம் யாண்டும் இன்மையின் இவை என்றும் உள்பொருள்களே என வலியுறுத்தியவாறு.