பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

FríFáð தொல்காப்பியம் - பொருளதிகாரம்

கூறி மறுத்தவாறு காண்க. இதனைச் செவ்வனங் கூறாமையின் அமைத்தார்.

'உள்ளுறை யுவம மேனை யுவமம் (தொல். பொ. 46) என்னுஞ் சூத்திரத்து விரிகதிச் மண்டிலம்’ (கலி. 7 1) என்னும் மருதக்க லியுட் சிறப்புக் கொடுத்து நின்றது காட்டினாம்.

அறத்தொடு நிலையும் பொழுதும் ஆறும் முதலியனவுஞ் செவ்வனங் கூறப்படுதலின் இவை கரந்தே கூறப்படுதலிற் 'கெடலரு மரபின்' என்றார். இவை தோழிக்குந் தலைவிக்கும் உரியவாறு செய்யுட்களை நோக்கியுணர் க. '

ஆய்வுரை :

இது மறைத்துக் கூறும் கிளவியாகிய உள்ளுறையின் வகை உணர்த்துகின்றது.

(இ-ஸ்) உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு எனக் கேடில்லாத மரபினையுடைய உள்ளுறை ஐந்து வகைப்படும் எ-று.

கருதிய பொருளை வெளிப்படக் கூறாது, தன்னோடு உடனுை ரைவதொன்றைச் சொல்லி அதன் பயனாக த தான் கருதிய பொரு ளைக் குறிப்பிற் புலப்படச் செய்தல் உடனுறையெனப்படும். உவமையைச் சொல்ல அதனால் உவமிக்கப்படும் பொருள் புலப் படச் செய்தல் உள்ளுறையுவமம் எனப்படும். ஒரு பொருளைச் சுட்டிக் கூறி அதனாற பிறிதோர் பொருள் புலப்படச் செய்வது சுட்டென்னும் உள்ளுறையாகும். நகைக் குறிப்பினாற் பிறிதோர் பொருள் புலப்படச் செய்தல் நகை என்னும் உள்ளுறையாகும். இதற்குச் சிறந்தது இது எனக் கூறுவதனானே பிறிதோர் பொருள் தோன்றக் கூறுவது சிறப்பு என்னும் உள்ளு ரை யாம் என்பது இளம்பூரணர் தரும் விளக்கமாகும்.

1. இவ்வுள்ளுறை யைங் தும் தாம் சொல்லக் கருதிய பொருளை மறைத்தே கூறப்படுதலின் கெடுதலரிதாகிய முறைமையுடைய உள்ளுறை ஐக்து என அடை புணர்த்தோ தினார்,

2. இவ்வுள்ளுறையைக் தும் தோழி கூற்றிலும் தலைவி சுற்றிற்கும் உரிய வாய் வருதலன்றி ஏனையோர் கூற்றுக்களில் இடம் பெறுதலில்லை என்பதனை அகத் திணைச் செய்யுட்களாகிய இலக்கியங்களை கோக்கியுணர்ந்து கொள்க என்பார் , 'இவை தோழிக்குக் தலைவிக்கும் உரியவாமா து செய்யுட்களை கோக்கியுனர் க’

என் தான் கச்சினார்க் கினியர் .