பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&& தொல்காப்பியம் பொருளதிகாரம்

அலந்தனென் வாழி தோழி கானற் புதுமலர் தீண்டிய பூநாறு குருஉச்சுவற் கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு செலவயர்ந் திசினால் யானே அலர்சுமந் தொழிகஇவ் அழுங்க லூரே.’’ (நற் கசுக)

இது போக்குக்குறித்தது. இரும் பிழி மகாஅர்" என்னும் பாட்டு

வரைவு குறித்தது. (Ε.ώ.)

நச்சினார்க்கினியம் :

இது, களவின்கட் டலைவியின் கண் நிகழ்வதோர் வழுவமைக் கின்றது.

(இ - ள்.) உரிமை ஒரு தலை வேண்டியும் . இடைவிடாத இன்பது கர்தலோடு இல்லறநிகழ்த்தும் உரிமையை உறுதியாகப் பெறுதலை விரும்புதலானும் பிரிதல் அச்சம் மகடூஉ உண்மை யானும். ஆள் வினைக்குறிப்புடைமையின் ஆண் மக்கள் பிரிவரென்று அஞ்சும் அச்சம் மகளிர்க்குண்டாகையினாலும் ; ஆங்கு அம்பலும் அலரும் களவு வெளிப்படுக்கும் என்று அஞ்சவந்த இருவகையினும் - அக்களவொழுக்கத்திடத்தே அம்பலும் அலரும் இக்களவைப் புலப் படுக்குமென்று அஞ்சும்படி தோன்றிய இருவகைக் குறிப்பானும், நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் . பிறர் தன்னை அயிர்த்துநோக்கும் நோக்கங் காரணமாக வந்த கூட்டம் இடையூ றுற்ற காரியத்தினாலும்; மனைவிகண் போக்கும் வரைவும் தோன் றும் தலைவியிடத்தே உடன்போக்கும் வரையக்கருதுதலுந் தோன்றும் (எ-று )

வழை யம லடுக்கத் து" (அகம். 328) என்பதனுண் 'முகந்துகொண் டடக்கு வம்' என இடைவிடாது இன்பது கர விரும்பியவாறு ம் உள்ளுறை பான் இல்லற நிகழ்த்த விரும்பிய வாறுங் காண்க

" உன்னங் கொள் கையொடு' (அகம். 65)

என்பது அம்பலும் அலரும் அஞ்சிப் போக்குடன் பட்டது.