பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் - நூற்பா கூடு sts &

என்பதாகும். இதன் கண் குவளை புலால் நாறு தற்கு அவன் இவற்றொடு கூடிய அவன் காதல் காரண மென்பது உம், எருக் கங்கண்ணி நறிதாதற்கு மகிழ்நன் செய்த துனி கூர் வெப்பம் முகிழ் நகை முகத்தால் தணிக்கும் புதல்வன்மேல் ஒரு காலைக கொரு கால்பெருகும் அன்புகாரணம் என்பது உம்' குறிப்பினார் பெறப் படுதலின் இது குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி (தொல் - சொல். ருரு) யாயிற்று எனவும் வடலுரலார் இதனை நேயம் என்ப’’ எனவும் சேனாவரையர் குறித்துள்ள மை 'கருப் பொருட்கு நேயந்தான்’ எனவரும் உரைத் தொடரொடு ஒப்பு நோக்கியுனரத்தகுவதாகும்.

உஉசு. இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே

திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே.

இளம்பூரணம் :

என்-எனின், இஃது இறைச்சிப் பொருள்வயிற் பிறக்கும் பிறிதுமோர் பொருள் உணர்த்துதல் துதலிற்று.

(இ-ள்) இறைச்சிப் பொருள்வயிற் றோன்றும் பொருளும் உள பொருட்டிறத்தியலும் பக்கத்து ஆராய்வார்க் கென்ற வ.ாறு:

இறைச்சிப் பொருள் பிறிதுமோர் பொருள் கொளக்கிடப் பனவுங் கிடவாதனவுமென இருவகைப்படும். அவற்றிற் பிறி தோர் பொருள் பட வருமாறு :

"ஒன்றேன் அல்லென் ஒன்றுவென் குன்றத்துப்

பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் நின்று கொய்ய மலரு நாடனோடு ஒன்றேன் தோழி ஒன்றி னானே.” ) eig) b = e_0.ہو (

என்பது வரை வெதிர் கொள்ளாது தமர் மறுத்தவழித் தலை

1. “இறைச்சியிற் பிறக்கும் பொருள்' எனவே, இறைச்சிப் பொருளும் அதனிடமாகப் பிறக்கும் பிறிதோர் பொருளும் எனப்பொருள் இரண்டென்றவாறு. எனவே காட்டிற்கும் ஊர்க்குங் துறைக்கும் அடைமொழியாய் உரிப்பொருட் புறத் தாய் வருவதும், அவ்வளவிலன்றிப் பிரிதுமோர் பொருள் பயப்ப உரிப்பொருட்குச்

சார்பாய் வருவதும் என இறைச்சிப்பொருள் இருவகைப்படும் என்பதாம்.