பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுவைகளின் களஞ்சியம்


ரு காவியத்தைப் படித்தால் உண்டாகும் இன்ப உணர்ச்சியே 'ரஸம்' என்று அறிஞர்களால் கூறப்படுகிறது. தமிழில் இதை 'மெய்ப்பாடு' என்ற பெயரால் குறிப்பர். பண்டைக் காலத்து முனிவர்கள் ஆண்டவனிடம் பக்திப் பெருக்கால் உள்ளம் பூரித்து நிற்கும் பொழுதுதான் வேதங்கள் பிறந்தன என்று ஆன்றோர் கூறுவர். வால்மீகியின் உள்ளம் ரஸப்பெருக்கால் திளைத்து நின்ற பொழுது தான் இராமாயணத்தின் மூல சுலோகம் பிறந்தாகக் கதை. ரஸத்தை ஒன்பது என்று கூறுவது வழக்கம்; "நவரஸங்கள்’ என்ற வழக்காற்றை நாம் கேட்டிருக்கினறோம் அல்லவா? தொல்காப்பியம் ரஸத்தை 'எண் சுவை' யாக வகுத்து விளக்கியிருப்பதை அதன் மெய்ப்பாட்டியலில் காணலாம். ரஸ தத்துவத்தை விளக்குவதற்கு வடமொழியில் பல நூல்கள் உள்ளன.

பரம்பரை வாசனை

உலகத்தில் நாம் பல பொருள்களைப் பார்க்கின்றோம். அவை நமக்கு சில சமயம் இன்பம் நல்கும்; இன்பம் நல்காத சமயங்களும் உள்ளன. நாம்